சமூக சேவைகள் திணைக்களத்திற்கு
வரவேற்கிறோம்

ஓரங்கட்டப்பட்டுள்ள மற்றும் பாதகமான நிலைக்கு உள்ளாகியுள்ள மக்கள் பிரிவை இலக்காகக் கொண்டு அவர்கள் முகம் கொடுத்துள்ள சிக்கல்களை கட்டுப்படுத்துகிற அதேவேளையில், சுயமுயற்சியுடன் எழுச்சியடையச் செய்து தேசிய அபிவிருத்திக்கு செயலூக்கமுள்ள பங்காளர்களாக்குவது சமூக சேவைகள் திணைக்களத்தின் பிரதான நோக்கமாகும். அதற்காக எமது நிறுவனத்தின்மூலம் கொள்கைகளைத் திட்டமிடல், தேசிய மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரைக்கும் பல்வேறு ஆய்வுகளும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற நலனோம்பல் நிகழ்ச்சித்திட்டங்களுக்கிடையில் வாழ்க்கைத்தொழிற் பயிற்சியை வழங்குதல், சமூகமயப்படுத்துதல், நடப்பு சமூக பிரச்சினைகளைக் குறைத்தல் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு வதிவிட புனர்வாழ்வளித்தல் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களும் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிகளில் அடங்குகின்றன.

நாம் இங்கே என்ன செய்கிறோம்

சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு

வீட்டு மட்டத்திலிருந்து அங்கவீனமுற்ற நபர்களினைப் புனர்வாழ்வளித்தல், சமூகத்துடன் ஒன்றிணைத்தல் மற்றும் சேவைகளினை வழங்குதல் இந்நிகழ்ச்சித் திட்டத்தினூடாக நிறைவேற்றப்படுகிறது.

வாழ்க்கைத் தொழிற்பயிற்சி

தாங்கள் 16 – 35 வதிற்கிடைப்பட்ட செவிப்புலனற்ற, வாய்பேசாத, விழிப்புலனற்ற, மூளை வளர்ச்சி குன்றிய அல்லது உடல் அங்கவீனத்தினைக் கொண்ட திருமணமாகாத  இளைஞர் அல்லது யுவதியாயின் பெருமைமிக்க குடிமகனாக சமூகத்துடன் ஒன்றிணைவதற்கு எம்முடன் ஒன்றிணையவும்.

முன்னிளம் பருவ அபிவிருத்தி

உங்களின் பிள்ளை பிறந்த வேளையில் குழந்தைப் பருவத்தில் அல்லது அதன் பின்னர் வளர்ச்சியில் சிக்கல் அல்லது தாமதம்,  அங்கவீன நிலை ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டிருப்பின் முன்பிள்ளைப் பருவ விருத்திக்கு நாம் தயாராகவுள்ளோம்.

மெதுவான உள வளர்ச்சியினைக் கொண்ட நபர்களினைப் பாதுகாத்தல்

பெற்றோர்கள் அல்லது  பாதுகாவலர்களினை இழந்த  மெதுவான உளவளர்ச்சியுடன் சமூகத்தில் பின்தள்ளப்பட்ட நபர்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

விழிப்புலனற்றவர்களுக்கான புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்

விழிப்புலனற்ற நிலைக்குட்பட்ட  நபர்களுக்குத் தேவையான சேவைகளினை வழங்குதல், புனர்வாழ்வளித்தல் மற்றும் நிவாரணங்களினை வழங்குதல் தொடர்பில் இந்நிதியம்  செயற்படுத்தப்படுகிறது.

சைகை மொழிபெயர்ப்பாளர் சேவை

செவிப்புலனற்ற மற்றும் வாய்பேசாத சமுதாயம், பொது சமூகத்துடன்  தொடர்பாடல் செயற்பாடுகளினை முன்னெடுப்பதற்கும் அவர்களின் செயற்பாடுகளினை  இலகுபடுத்துவதற்கும்  தேவையான சைகை மொழிச் சேவையினை வழங்குவதற்கு எமது உத்தியோகத்தர்கள் எவ்வேளையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களினைப் புனர்வாழ்வளித்தல்

நீங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது உங்களின் அன்புக்குரியவர்,  போதைக்கு அடிமையாகியிருப்பின் அவ்வாறான நபர்களினைப் புனர்வாழ்வளித்தல், அவர்களின்  தொழில்வாண்மைத் திறன்களினை மேம்படுத்துதல் மற்றும் சமூகத்துடன் ஒன்றிணைப்பற்கு எமது உதவியினை வழங்குகிறோம்.

நீங்கள் தேடுவது
பயிற்சி நெறியா

நீங்கள் 16 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட செவிப்புலனற்ற, பேசமுடியாத, கட்புலனற்ற, மனவளர்ச்சி குன்றிய அல்லது உடல் ஊனமுள்ள திருமணமாகாத வாலிபரா? அல்லது இளம் பெண்ணா? அப்படியானால் எங்களுடன் சேருங்கள். உங்களை பெருமைமிக்க பிரசையாக உயர்த்துவதற்கு அரச நிறுவனம் என்ற வகையில் நாம் தயாராக இருக்கிறோம்.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய நிகழ்வுகள்

எமது கருத்திட்டங்கள்

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம்

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம்

வெள்ளைப் பிரம்பு என்பது கட்புலனற்ற நபர்களின் அசைவையும் திசையையும் பூர்த்திசெய்கின்ற கருவியாகும். இந்த கருவி கட்புலனற்ற நபர்களின் அடையாள குறியீடாகவும்...

எமது கருத்திட்டங்கள்

எமது கருத்திட்டங்கள்

அகில இலங்கையில் 331 பிரதேச செயலகங்களில் சுயசக்தி அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளினதும் அவர்களுடைய குடும்பத்தில் வாழ்கின்றவர்களினதும் வாழ்க்கை நிலையை உயர்த்துவதை...

மாற்றுத்திறனாளிகளின் தேசிய கலாசார கலை விழா "சித் ரூ" (மனங்கவர் உருவம்)

மாற்றுத்திறனாளிகளின் தேசிய கலாசார கலை விழா "சித் ரூ" (மனங்கவர்...

சமூக சேவைகள் திணைக்களத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள மாற்றுத் திறனுள்ள நபர்களின் கலை திறன்களை அரங்கேற்றும் நோக்கில் "சித்...

சீதுவ வாழ்க்கைத்  தொழிற் பயிற்சி நிறுவனம்

தொலைநோக்கு

அங்கவீனமுற்ற நபர்களுக்கு  சமூகத்தினூள் சம வாய்ப்புக்களினை வழங்குதல்.

பணிக்கூற்று

அங்கவீனமுற்ற நபர்களுக்கு வாழ்க்கைத் தொழிற் பயிற்சி மற்றும் புனர்வாழ்வினூடாக சிறந்த, உகந்த பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளினை சமூகத்தினுள்  உருவாக்குதல்.

வரலாறு

1912  ஆம் ஆண்டில் மிஷனரிகள், இரத்மலான  செவிப்புலனற்றவர் பாடசாலையினையும், இராகம செவிப்புலனற்றவர் பாடசாலையினையும் மற்றும் 1956 ஆம் ஆண்டில் கைதடியில் காது கேளாத ஊமைகளுக்கான பாடசாலையினையும்  ஆரம்பித்தனர். இங்கிலாந்தில் உள்ள ஷெனனா மிஷனரி அமைப்பால் தொடங்கப்பட்ட பள்ளிகளின் கீழ் ஒரு தொழில்துறை பட்டறையாக  விழிப்புலனற்ற மற்றும் செவிப்புலனற்ற  நபர்களுக்கான சேவைகளினை வழங்குவதற்கு இச்சீதுவ நிறுவனம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1956 ஒக்டோபர் மாதம் 01 ஆந் திகதி இந்நிறுவனம் அரசுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது அமுலாக்கப்படும் பாடநெறிகள்

தொடர் இல.

பாடநெறி

ஒரு வருடம்

இரண்டு வருடங்கள்

01

ஆடைத் தொழில்

download

 

02

மர வேலைப்பாடுகள்

download

 

03

நரம்புப் பயிற்சிகள்

download

 

04

விளக்குமாறு தும்புத்தடி

download

 

05

யூகி

download

 

06

காலணிகள்

download

 

07

பெண்களுக்கான உடைகள்

 

download

08

மின்னணு

 

download

09

தச்சு வேலை

 

download

10

கணனி

 

download

பயண வழி

கொழும்பு – நீர்கொழும்பு வீதி, சீதுவ சந்தியினைக் கடந்து  நீர்கொழும்பினை நோக்கி 2.8 கிலோமீற்றர் செல்லும்போது  சந்திக்கின்ற லியனகேமுல்ல கிராமத்தின் வலது பக்கத்தில் இந்நிறுவனம் அமைந்துள்ளது.

நிலையப் பொறுப்பு உத்தியோகத்தர்,

சீதுவ வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனம்,

லியனகேமுல்ல, சீதுவ.
Tele       :-+94 112 253 503

Fax         :-+94 112 253 503

vtcseeduwasrilanka[at]gmail.com

தமது குழந்தைக்கு ஏதேனும் ஊனம் இருப்பதாக அறிந்துகொண்ட பின்னர் பெற்றோர் போன்று முழு குடும்பமும் நிம்மதியிழந்த நிலைமைக்கு உள்ளாகும். ஆகவே ஊனமுள்ள பிள்ளைகளின் அபிவிருத்தியைப் போன்று பெற்றோர்களின் மனநிலை அபிவிருத்திக்கும் முற்கூட்டியே தலையிட்டு சேவைகளை வழங்குவதன் மூலம் ஆகக்கூடிய அபிவிருத்தியை அடைய முடியும் என்பது கல்விமான்களின் கருத்தாகும். மனோதத்துவ உளவளத்துணை ஊடாக பெற்றோர்களின் மனநிலையை உயர்த்துவதற்காகவும், மிகச் சிறுவயதிலிருந்து பொருத்தமான பல்வேறு சேவைகளை வழங்குவதன்மூலம் பிள்ளைகளின் ஆகக்கூடிய அபிவிருத்திக்கும் சிறுவர் வழிகாட்டல் நிலையத்தின்மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் ஊடாக 16 வயது வரையிலான சிறுவர்களின் சேவைகளை இணைப்பாக்கம் செய்து அவர்களின் கல்வி மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதையும் வயதுவந்த ஊனமுற்றுள்ள பிள்ளைகள் தொடர்பாக சமூக சேவைகள் திணைக்களத்தின் நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குவதும் இடம்பெறுகிறது.

நோக்கு

குடும்ப அங்கத்தினர்களினதும் பிரசைகளினதும் நெருக்கமான இடைத் தொடர்பை பேணி, இருக்கின்ற சக்திகளையும் வளங்களையும் ஆகக்கூடியளவில் பயன்படுத்தி விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கு மற்றவர்களுக்கு சமமாக வாழ்வதற்கு வசதியான சாதகமான சூழலை உருவாக்குதல்

செயற்பணி

பெற்றோர்களும் குடும்ப அங்கத்தினர்களும் சவால்களுக்கு பெருமிதத்துடன் முகம்கொடுப்பதற்காக வலுவூட்டி, விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளின் ஆகக்கூடிய அபிவிருத்திக்கு முற்கூட்டியே தலையிட்டு, ஊக்கமளித்து, சரியான நேரத்தில் நெருங்கக்கூடிய சேவை வலையமைப்பை உருவாக்குதல் மற்றும் இணைப்பாக்கம் செய்வதற்காக இடையீட்டாளராக செயலாற்றி சேவை பெறுநர்களை மகிழ்ச்சியடையச்செய்தல்

வரலாறு

இலங்கையில் வாழ்கின்ற பல்வேறு ஊனமுற்ற பிள்ளைகளின் முன்னிளம் பருவத்தை அபிவிருத்தி செய்வதற்காக 1994ஆம் ஆண்டிலிருந்து ஜய்கா (JICA) நிறுவனத்தின் தொழில்நுட்ப அனுசரணையின் கீழ் நாடு முழுவதிலும் அமைந்துள்ள அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கு உதவியளிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று சமூக சேவைகள் திணைக்களத்தின்மூலம் செயற்படுத்தப்பட்டது.

அதன் கீழ் முன்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது செயற்படுத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களில் இருந்த குறைபாடுகளை குறைத்து தரமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கத்தில் ஜப்பானில் வாழ்கின்ற பல்வேறு ஊனமுள்ள பிள்ளைகளுக்காக ஆரம்பிக்கப்படுகின்ற சுகாதார, கல்வி மற்றும் சமூக நலனோம்பல் சேவைகள் தொடர்பாக கற்றுக்கொள்ளுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் பெறுபேறாக சிறுவர் வழிகாட்டல் நிலையத்தை மையமாகக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்காக சேவை வழங்குவதற்கு முற்கூட்டியே தலையிடும் நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த சிறுவர் வழிகாட்டல் எண்ணக்கரு 2003இல் மஹரகமையில் நிறுவப்பட்டது.

சிறுவர் வழிகாட்டல் நிலையத்தின் சேவைகளின் தனித்துவமான தன்மை

  • மிகச் சிறு வயதிலிருந்து சேவைகளை வழங்குவதற்கு தலையிடல் (03 மாதத்திலிருந்து)
  • உடல், உள மற்றும் ஏனைய முக்கியமான சிக்கல்கள் உள்ள எந்தவொரு பிள்ளைக்கும் சேவை வழங்குதல்.
  • பல்வகை தொழில் சேவைகள் ஊடாக பிள்ளைகளை அபிவிருத்தி செய்வதற்குத் தலையிடல். (Multi-Disciplinary Team Work)
  • சேவை பெறும் பிள்ளைகளுக்காக தனித்துவமான செயல்முறைகளுக்கு அமைவாக சேவைகளை வழங்குதல். (Individual Assessment - Progress Review)
  • ஒவ்வொரு பிள்ளைக்கும் தனிநபர் அபிவிருத்தி திட்டத்தின் பிரகாரம் (IEP - Individual Education Plan) சேவைகளை வழங்குதல்.
  • அடிப்படை திறன்களை விருத்திசெய்ததன் பின்னர் முன்பள்ளிக்கும் முறைசார்ந்த பாடசாலைகளுக்கும் அனுப்புதல்.
  • தினசரி வாழ்க்கை திறனை அபிவிருத்தி செய்வதில் அடிப்படை கவனம் செலுத்துதல்.
  • முன்பள்ளிகள் மற்றும் முறைசார்ந்த கல்வியில் ஈடுபடுத்திய பிள்ளைகளுக்கு பின்பொறுப்பு சேவைகளை வழங்குதல்.
  • தகைமைகளும் அனுபவமும் உள்ள பணியாட் தொகுதியொன்று சேவையாற்றுதல்.
  • ஒவ்வொரு பிரிவு தொடர்பாக கவனம் செலுத்துகின்ற பரிபூரண அணுகுமுறை (சேவை பெறும் பிள்ளைகள்/ பெற்றோர்கள்/ குடும்ப அங்கத்தினர்கள்/ பிரசைகள்) Holistic Approach

வழங்கப்படுகின்ற சேவைகள்

  • விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்காக,
    • விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்காக,
    • கல்வி சேவை
    • புனர்வாழ்வு சேவை (பேச்சு நோய் ஆய்வு/ தொழில் நோய் ஆய்வு/ உடல் பிடித்துவிடும் சிகிச்சை)
    • இசை, நடனம், பேன்ட் இசை போன்ற அழகியல் பயிற்சி வகுப்புகள்
    • தேசிய அடிப்படையிலான நிகழ்ச்சித்திட்டங்களுக்கு பயிற்சியளித்தல்
    • முன்பள்ளிக்கு/ முறைசார்ந்த பாடசாலைகளுக்கு அனுப்புதல்
    • சுகாதார சிகிச்சை நிலையங்கள்
    • ஒன்றுகூடல்
    • பல்வகை ஊனங்கள் உள்ள பிள்ளைகளுக்கான வகுப்புகள்
    • முன்பள்ளிக்கும் முறைசார்ந்த பாடசாலைகளுக்கும் அனுப்பப்பட்ட பிள்ளைகளுக்கு 16 வயதுவரை பின்பொறுப்பு சேவைகள்
    • மாதாந்த பிறந்தநாள் விருந்துபசாரங்களை நடத்துதல்
  • பெற்றோர்களுக்கும் குடும்ப அங்கத்தினர்களுக்கும்
    • மனநிலை அபிவருத்திக்காக மனோதத்துவ/ உளவளத்துணை சேவைகள்
    • சுகாதார கல்வி சேவைகள் நிகழ்ச்சித்திட்டங்கள்
    • சமய நிகழ்ச்சித்திட்டங்கள்
      • சீல தியான நிகழ்ச்சித்திட்டங்கள்
      • நத்தார் கொண்டாட்டம்
      • பிரதான மத வணக்கஸ்தலங்களை வழிபடல்
      • கல்வி மற்றும் உல்லாச சுற்றுலா
    • இயற்கை சிகிச்சை அக்கடமியின் கீழ் உள்ளக மற்றும் வெளி நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்
    • குடும்பங்களின் சகோதர சகோதரிகளுக்காக நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்
  • பிரசைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள்
    • முன்பள்ளி ஆசியரி பயிற்சி. (இடையீடு மற்றும் விசேட கல்வி)
    • சிறுவர் வழிகாட்டல் நிலையத்தை ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துதல்
    • அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் பணியாட் தொகுதியினருக்கு அறிவூட்டல்
    • உள்நாட்டு வெளிநாட்டு தொழில்புரிவோருக்கு தகவல்களையும் சேவைகளையும் வழங்குதல்
    • அரச கொள்கைகளைத் தயாரிப்பதற்கு பங்களிப்புச்செய்தல்

பயண வழி

மஹரகம - நுகேகொட 119 பேருந்து பாதையில், நாவின்ன சுதேச மருத்துவ நிலையத்தைக் கடந்து பத்திரகொட பாதையில் சுமார் 500 மீற்றர் வந்து, சமாஜ பாதையில் சுமார் 100 மீற்றர் வரும்போது, வெல வீதியில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.

  • நிலையப் பொறுப்பதிகாரி,
    சிறுவர் வழிகாட்டல் நிலையம்,
    இல. 11, வெல வீதி, மஹரகம.
  • +94 112 746 801
  • -
  • cgcmaharagama[at]gmail.com

நோக்கு

மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்கு அன்பு நிறைந்த உலகமொன்றைக் கட்டியெழுப்புவது மற்றும் தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்கச்செய்தல்

செயற்பணி

மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்கு அன்பையும் பாசத்தையும் வழங்குவதன் மூலம் அவர்களின் ஆற்றல்களையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ளுவதற்கு சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களை உற்பத்தி செயற்பாட்டில் பங்களிக்கச் செய்வதன்மூலம் தேசிய அபிவிருத்தியில் பங்காளர்களாக்கிக்கொள்ளுதல்

வரலாறு

சமூக சேவை திணைக்களத்தின் நவோதய கருத்திட்டத்திலேயே துணை கிளையாக 2001 யூலை மாதம் 31ஆம் திகதி பெற்றோர்களின் பாதுகாப்பு கிட்டாத மனவளர்ச்சி குன்றிய ஆண்பிள்ளைகளுக்கு சேவை வழங்குவதற்காக இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்போதிருந்த அரசாங்கத்தில் இதற்காக பூரண அனுசரணை கிடைத்துள்ளது. நிறுவனத்திற்கு சுமார் 17 ஏக்கர் காணியை கம்பஹா, உடதுன்பிட்டிய, வரபலானையில் வாழ்ந்து மரணமடைந்த திரு. ஜயவீர ஆரச்சிலாகே லுவிஸ் சிஞ்ஞோ நன்கொடையாக அளித்துள்ளார். பிற்காலத்தில் அவரை நினைவுகூர்வதற்காக இந்நிறுவனத்திற்கு ஜயவிரு செவன என பெயரிடப்பட்டுள்ளது. தற்பொழுது இந்நிறுவனத்தில் சுமார் 80 ஆண்பிள்ளைகளுக்கு வதிவிட வாதுகாப்பு வழங்கப்படுகின்றது.

நிறுவன நிகழ்ச்சித்திட்டம்

பயண வழி

கொழும்பு - அவிசாவல ஹைலெவல் வீதியில், அவிசாவெலைக்கு சமீபத்தில் புவக்பிட்டிய நகரத்திலிருந்து வலப்பக்கம் உள்ள ஹேவாஹின்ன பாதையில் சுமார் மூன்றரை கிலோமீற்றர் போகும்போது நோர்த் அம்பலம்வத்த வரும். அதைக் கடந்து போகும்போது ஜயவிரு செவன அமைந்துள்ளது.

  • நிலையப் பொறுப்பதிகாரி,
    ஜயவிரு செவன நிறுவனம்,
    நோர்த் அம்பலம்வத்த, புவக்பிட்டிய.
  • +94 363 361 999
  • -
  • jayawirusewanasamadhi[at]gmail.com

நோக்கு

இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளித்து சிகிச்சையளிக்கும் முதன்மை நிறுவனமாக இருத்தல்

செயற்பணி

உண்மையான வாழ்க்கைத் தத்துவத்தையும் வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியையும் சொல்லிக்கொடுப்பது ஆற்றல்களை மெருகூட்டுவது என்பவற்றின்மூலம் போதைப்பொருள் மீதுள்ள கவர்ச்சியை குறைத்து போதைப்பொருளுக்கு பலியான இளம் சந்ததியினரை தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்கச்செய்வது எமது சேவையாகும்

வரலாறு

சமூக சேவை திணைக்களத்தின் நவோதய கருத்திட்டத்திலேயே துணை கிளையாக 2007/07/31ஆம் திகதி புவக்பிட்டிய மனவளர்ச்சி குன்றிய சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க அம்மையாரின் அரசாங்கத்தில் இதற்காக பூரண அனுசரணை கிடைத்துள்ளது. நிறுவனத்திற்கு சுமார் 17 ஏக்கர் பெறுமதியான காணியை நன்கொடையாக அளித்தவர் கம்பஹா, உடதுன்பிட்டிய, வரபலானையில் வாழ்ந்து மரணமடைந்த திரு. ஜயவீர ஆரச்சிலாகே லுவிஸ் சிஞ்ஞோ. பிற்காலத்தில் அவரை நினைவுகூர்வதற்காக ஜயவிரு நிறுவனம் என பெயரிடப்பட்டுள்ளது.

சேவைகள்

  • உடல் நலத்திற்கான யோகாசனம்
  • மன ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான சமய நிகழ்ச்சிகள்
  • குழு உணர்வை மேம்படுத்துவதற்காக குழு நிகழ்ச்சித்திட்டங்கள்
  • இரசனையை ஏற்படுத்தும் அழகியல் நாடகம், நடனம், இசை நிகழ்ச்சிகள்
  • மன சமநிலையை வளர்த்துக்கொள்ளுவதற்காக விவசாய மற்றும் சூழல் சார்ந்த செயற்பாடுகள்
  • மகிழ்ச்சி மன இலகுநிலை என்பவற்றை ஏற்படுத்துவதற்காக குடும்ப உளவளத்துணை மற்றும் தனிப்பட்ட உளவளத்துணை
  • வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு தேவைப்படும் சக்தியை வளர்ப்பதற்காக மாலை சந்திப்பு மற்றும் காலை சந்திப்பு நிகழ்ச்சித்திட்டங்கள்
  • விளையாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள்
  • தொழில்புரிபவராக சமூகமயமாவதற்குத் தேவையான ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்க்கைத்தொழிற் பயிற்சி

குறிக்கோள்கள்

  • நீங்கள் இழந்த மகிழ்ச்சியை மீண்டும் பாதுகாத்துக்கொள்ளுதல்
  • உங்கள் தாய்க்கு, மனைவிக்கு, சகோதார சகோதரிகளுக்கு, மகளுக்கு, மகனுக்கு கிடைக்காமல்போன பாசத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு
  • தாய்நாட்டுக்கு பெறுமதியான பிரசையாவதற்கு
  • வாழ்க்கையில் துன்பப்படுவதற்கு அல்ல. வாழக்கையை அனுபவிப்பதற்கு
  • இழந்த ஆரோக்கியமான இன்பத்தை மீண்டும் பெறுவதற்கு
  • பெருமிதத்துடன் பிரசையாக வாழ்வதற்கு கைகொடுத்து உதவுவதற்கு

பயண வழி

கொழும்பு - அவிசாவல ஹைலெவல் வீதியில், அவிசாவெலைக்கு சமீபத்தில் புவக்பிட்டிய நகரத்திலிருந்து வலப்பக்கம் உள்ள ஹேவாஹின்ன பாதையில் சுமார் மூன்றரை கிலோமீற்றர் போகும்போது நோர்த் அம்பலம்வத்த வரும். அதைக் கடந்து போகும்போது ஜயவிரு சமாதி அமைந்துள்ளது.

  • நிலையப் பொறுப்பதிகாரி,
    ஜயவிரு சமாதி நிறுவனம்,
    நோர்த் அம்பலம்வத்த, புவக்பிட்டிய.
  • +94 112 253 503
  • +94 112 253 503
  • vtcseeduwasrilanka[at]gmail.com