நோக்கு

வாழ்க்கைத்தொழிற் பயிற்சியுடன் இணைந்த திறன்விருத்தி செயற்பாட்டின் ஊடாக விசேட ஆற்றல்கள் உள்ள நபரை சமூகமயப்படுத்துதல்

செயற்பணி

மாற்றுத்திறனுள்ள நபரின் ஆக்கத்திறனை அடையாளம் கண்டு, பிரதான ஓட்டத்தில் அவர்களை உள்வாங்கிக்கொள்ளும் மூலோபாயமாக வாழ்க்கைத்தொழிற் பயிற்சியை வழங்குதல் மற்றும் அதனூடாக அவர்களுக்கு சமூகமயமாவதற்கும் சீவனோபாயத்திற்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்துவதற்கான நிறுவன கடமைப்பொறுப்பை நிறைவேற்றுதல்.

வரலாறு

1994ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த அரசு மாற்றுத்திறனுள்ள நபர்களுக்காக வழங்குகின்ற சேவைகளை விரிவுபடுத்துவதற்காக இரண்டு வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனங்களை சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டது. 1995ஆம் ஆண்டில் CBR நிகழ்ச்சித்திட்டத்தின் மருத்துவ சிகிச்சை நிகழ்வு அயகம ராஹூல வித்தியாலயத்தில் நடைபெற்றது. அதன்போது மாற்றுத்திறனுள்ள பெரும் எண்ணிக்கையிலான நபர்களை வாழ்க்கைத்தொழிற் பயிற்சியில் ஈடுபடுத்த முடியும் என்பது தெளிவானது. அதன் பிரகாரம் அப்போது கலவான தொகுதி அமைப்பாளராகவிருந்த சுகதார, நெடுஞ்சாலைகள் மற்றும் சமூக சேவைகள் பிரதி அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சியால் நிறுவனத்தை ஆரம்பிப்பதற்காக 10 ஏக்கர் காணியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

1996 யூலை மாதம் 01ஆம் திகதி சுகதார, நெடுஞ்சாலைகள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம்.பவுசி அவர்கள் இந்த நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு அடிக்கல் நாட்டினார். 2005ஆம் ஆண்டில் நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு நிதி ஏற்பாடு ஒதுக்கப்பட்டது. எச்.எஸ் பியசேன அவர்களின் தலைமையில் நிறுவனத்தை நடத்துவதற்கு விபவி அபிவிருத்தி மன்றம் என்ற பெயரில் நிர்வாக சபையொன்று அமைக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டதோடு செயலாளராக சமூக சேவை உத்தியோகத்தர் பதவி வழியாக நியமிக்கப்பட்டார். 2006 மார்ச் மாதம் 24ஆம் திகதி இந்த நிறுவனம் அறிவு குறைபாடுள்ள ஆண்பிள்ளைகளுக்கு வாழ்க்கைத்தொழிற் பயிற்சியை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. 2015 மார்ச் மாதம் 01ஆம் திகதி அப்போதிருந்த சமூக சேவை பணிப்பாளர் திருமதி அனுஷா கோகுல பர்னாந்து அவர்களின் தலையீட்டின் மீது கலவான விபவி வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனம் என்ற வகையில் இந்த நிறுவனத்தை சமூக சேவைகள் திணைக்களம் பொறுப்பேற்றுக்கொண்டது.

தற்போது செயற்படுத்தப்படும் பாடநெறிகள்

பயண வழி

கலவான நகரத்திலிருந்து மத்துகம பாதையில் சுமார் 4.5 கிலேமீற்றர் வந்ததன் பின்னர் இடது பக்கம் கலவான வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனம் வரும்.

  • நிலையப் பொறுப்பதிகாரி,
    கலவான வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனம்,
    பஹல குகுலேகம, கலவான.
  • +94 452 255 017
  • +94 152 255 017
  • vibhawivti[at]gmail.com