நோக்கு

விசேட தேவைகள் உள்ள தேசத்தின் புதல்வர்களை புதல்விகளை பிரதான ஓட்டத்தில் சேர்க்கும் முன்னணி நிறுவனமாக இருத்தல்

செயற்பணி

அரச கொள்கைகளுக்கு அமைவாக வளங்களை இணைப்பாக்கம் செய்து மக்களின் பங்கேற்புடன் நிலையான திட்டத்துடன் விசேட தேவைகள் உள்ள தேசத்தின் புதல்வர்களை புதல்விகளை நிலைபேறான அபிவிருத்தியில் பங்காளர்களாக்குவது

வரலாறு

2006ஆம் ஆண்டில் அப்போதைய சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரின் அறிவித்தலின் மீது வடமேல் மாகாண மாகாணசபையின் சமூக சேவை பணிப்பாளரால் மாற்றுத்திறனுள்ளவர்களுக்காக வாழ்க்கைத்தொழிற் பயிற்சியுடன் பாதுகாப்பளிக்கும் நிலையமாக இந்த நிறுவனத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் முதற்கட்ட பணிகளுக்கு 04 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அத்துடன் வடமேல் மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் ஒற்றை மாடி கட்டிடமாக இது அமைக்கப்பட்டது.

இரண்டாவது கட்டத்தில் இரண்டு மாடி கட்டிடம் அமைக்கப்பட்டதன் பின்னர் வடமேல் மாகாண சபையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பிரவேச செயலமர்வில் இந்த நிறுவனம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதன் விளைவாக அப்போதைய சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரினதும் வடமேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரினதும் விசேட தலையீட்டின் மீது 2014 யூலை 15ஆம் திகதி மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கைத்தொழிற் பயிற்சி வழங்குகின்ற நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது செயற்படுத்தப்படும் பாடநெறிகள்

பயண வழி

குருணாகல், நாரம்மல ஊடாக மாதம்பே நகரத்திற்கு வருவதற்கு 2.5 கிலோமீற்றருக்கு முன்னர் சந்திக்கின்ற பொத்துவில கிராமத்தில் இறங்கி, தேவால வீதியில் சுமார் 500 மீற்றர் வந்ததன் பின்னர் இந்த நிறுவனத்தை அடையலாம்.

  • நிலையப் பொறுப்பதிகாரி,
    மாதம்பே வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனம்,
    தேவால வீதி, பொத்துவில, மாதம்பே.
  • +94 322 248 588
  • -
  • vtcssdoffice.madampe[at]gmail.com