நோக்கு

மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கைத்தொழிற் பயிற்சியை வழங்கும் அதிசிறந்த வாழ்க்கைத்தொழிற்; பயிற்சி நிறுவனமாக இருத்தல்

செயற்பணி

மாற்றுத்திறனாளிகளுக்கு வினைத்திறமிக்க மற்றும் பயனுறுதிமிக்க வாழ்க்கைத்தொழிற் பயிற்சியை வழங்குவதன் மூலம், அவர்களின் தனித்துவமான திறமைகளையும், ஆற்றல்களையும் மெருகூட்டி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் சமூக அபிவிருத்தியில் செயலூக்கமுள்ள பங்காளர்களாக்கிக் கொள்ளுவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதாகும்

வரலாறு

1984 சனவரி மாதம் 18ஆம் திகதி சமூக சேவைகள் திணைக்களமும் சுகாதார திணைக்களமும் இணைந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்காக வாழ்க்கைத்தொழிற் பயிற்சியை வழங்கும் நோக்கில் இந்த வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.

மேல்மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல பிரதேச செயலக பிரிவில் றாகம புனர்வாழ்வு மருத்துவ நிலையத்தில் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு மருத்துவ நிலையத்தில் தங்கியிருந்து சிகிச்சையையும் புனர்வாழ்வையும் பெறுகின்ற மாற்றுத்திறனாளிகளான பயிலுநர்களுக்காக இந்த நிறுவனம் பின்வரும் வாழ்க்கைத்தொழிற் பயிற்சி பாடநெறிகளைக் கற்பதற்கு ஏற்கனவே சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது செயற்படுத்தப்படும் பாடநெறிகள்

றாகம புனர்வாழ்வு மருத்துவ நிலையத்தில் புனர்வாழ்வு செயற்பாட்டிற்காக அனுமதிக்கப்படுகின்ற முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் ஏனைய ஊனமுள்ள நோயாளர்களின் தேவைகளுக்கு அமைவாக இந்த நிறுவனத்தில் வாழ்க்கைத்தொழிற் பயிற்சி பாடநெறிகளை 06 மாதம் முதல் ஒரு வருடம் வரையிலான காலவரையறையில் பூர்த்திசெய்து முடிக்க முடியும். குறிப்பாக புனர்வாழ்வு செயற்பாட்டில் ஒரு பிரிவாக வாழ்க்கைத்தொழில் ரீதியாக மாற்றுத்திறனுள்ளவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதும் வலுவூட்டுவதும் இந்த நிறுவனத்தின் கடமைப் பொறுப்பாகும்.

புனர்வாழ்வு மருத்துவ நிலையத்தில் மருத்துவ சிகிச்சைக்காகப் பதிவுசெய்துகொண்டுள்ள, நீண்டகாலமாக மருத்துவ சிகிச்சைக்காகக் கலந்துகொள்ளுகின்ற வீட்டிலிருந்து வரக்கூடிய மாற்றுத்திறனாளிகளான இளைஞர் யுவதிகளுக்கும் மருத்துவ பரிந்துரையின் மீது இந்த நிறுவனத்தில் வாழ்க்கைத்தொழிற் பயிற்சிக்காக அனுமதி பெற முடியும்.

அதன் பிரகாரம் மாற்றுத்திறனாளியான நோயாளியொருவர் வைத்தியசாலையில் அனுமதி பெற்றதன் பின்னர். மருத்துவ பரிந்துரையின் மீது வாழ்க்கைத்தொழிற் பயிற்சியை ஆரம்பிக்கக்கூடிய வகையில் பயிற்சி நெறிகள் இந்த வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனத்தின்மூலம் நடத்தப்படுகின்றன.

பயண வழி

றாகமையிலிருந்து கடவத்த பேருந்து பாதையில் சுமார் 01 கிலோமீற்றர் தூரம் பயணம்செய்து புனர்வாழ்வு மருத்துவ நிலையத்தின் வலப்பக்கம் அமைந்துள்ள வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிலையத்தை அடைய முடியும்.

  • நிலையப் பொறுப்பதிகாரி,
    றாகம வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனம்,
    புனர்வாழ்வு மருத்துவ நிலையம், றாகம.
  • +94 113 355 491, +94 112 958 212
  • +94 112 959 181
  • ragamavtc[at]gmail.com