நோக்கு

பயிற்சியின் ஊடாக வாழ்க்கையை வெற்றிகொள்தல்

செயற்பணி

விசேட தேவையுள்ள பிள்ளைகளுக்கு வாழ்க்கைத்தொழிற் பயிற்சியை வழங்குவதன் ஊடாக அவர்கள் சுயாதீனமாக எழுந்து நிற்பதற்குத் தேவையான பொருளாதார மற்றும் சமூக சூழலை ஏற்படுத்துதல் மற்றும் அவர்கள் வசமுள்ள ஆக்கத்திறனை வலுப்படுத்துவது எமது சேவையாகும்

வரலாறு

அமுணுகும்புர என்பது அப்போதைய சியநேகோறளையின் மெதபத்துவ பிரிவில் அமைந்துள்ள கிராமமாகும். அதாவது மேல்மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில், மஹர தேர்தல் தொகுதியில், அமுணுகும்புர கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள கிராமமாகும். அப்போதைய அமுணுகும்புர கிராமத்தில் கிராம தலைவராக இருந்த திரு. கழுஆரச்சிகே தொன் பீரிஸ் ரத்நாயக்க 3563ஆம் இலக்க பரிசு உறுதியின்மூலம் அரசாங்கத்திற்கு நன்கொடையாக அளித்த ஏக்கர் 04, றூட் 03, பர்ச்சஸ் 03 அளவிலான காணி 1981 ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கழுஆரச்சிகே தொன் பீரிஸ் ரத்நாயக்க அவர்கள் 1988 ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி மரணமடைந்ததை அடுத்து அவருடைய மனைவியான திருமதி. ஆர்.கே.எலிஸ் நோனாவும் 1989 பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி மரணமடைந்ததன் பின்னர் இந்த சொத்து முழுமையாக அரச சொத்தாகியது.

இந்த காணியையும் சொத்தையும் அரசாங்கத்திற்கு ஒப்படைத்தபோது திரு. ஆர்.கே.டீ.பி. ரத்நாயக்க பரிசு உறுதியில் தமது அபிலாஷையை இவ்வாறு தெரிவித்துள்ளார். "இலங்கை திருநாட்டில் உள்ள அநாதை பிள்ளைகளுக்கும் வலதுகுறைந்த பிள்ளைகளுக்கும் அதேபோன்ற ஊனமுள்ள மக்களுக்கும் நிம்மதியையும் நலனோம்பலையும் ஏற்படுத்துவது எனது ஆசையாக இருப்பதால்" (மேற்கோள் பரிசு உறுதியின் பிரதி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் மெதுவாக மன வளர்ச்சியடைகின்றவர்களுக்காக 1990ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததோடு 1991இல் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனமாக மேம்படுத்தப்பட்டு இற்றைவரை நடத்தப்படுகின்றது.

தற்போது செயற்படுத்தப்படும் பாடநெறிகள்

பயண வழி

கொழும்பு - கண்டி வீதியில் மிரிஸ்வத்த சந்தியில் இறங்கி பேருந்து இலக்கம் 205, கம்பஹா - கிரிந்திவெல பேருந்தில் சுமார் எட்டு கிலோ மீற்றர் பயணம் செய்ததன் பின்னர் வருகின்ற பட்டேபொல சந்தியில் வலப்பக்கம் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.

  • நிலையப் பொறுப்பதிகாரி,
    அமுணுகும்புர வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனம்,
    அமுணுகும்புர, வத்துறுகம.
  • +94 332 279 321
  • +94 332 279 321
  • vtiamunkumbura[at]gmail.com