நோக்கு

சமூகத்திற்குப் பயனுள்ள நாட்டுக்கு பயனுறுதிமிக்க சுயமாக எழுந்திருப்பதற்கு சக்தியும் தைரியமும் உள்ள பெருமைமிக்க வாலிப சந்ததியொன்றை இலங்கை நாட்டுக்கு கொடுத்துதவுதல்.

செயற்பணி

மாற்றுத்திறனுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வாழ்க்கைத்தொழிற் பயிற்சியை அளிப்பதன்மூலம் பயனுறுதிமிக்க தொழிலில் ஈடுபடுவதற்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் உரிய பயிற்சிகளை அளித்து வழிகாட்டுவதன் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயற்பாட்டுக்குப் பங்களிக்கச்செய்தல்.

வரலாறு

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரகெட்டிய பிரதேச செயலகப் பிரிவில் அங்குணுகொலபெலஸ்ஸ நகரத்திலிருந்து சுமார் 12 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. முறுத்தவெல திட்டத்தின் கீழ் புதிய நகரமொன்றை அமைக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. அத்துடன், அதில் மத்திய மகா வித்தியாலயத்திற்காக இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டது. ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபையினால் அமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம் பலகாலமாக புல்பூண்டுகள் வளர்ந்து காணப்பட்டது. அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இது தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கட்டிடம் மாற்றுத்திறனுள்ள பிள்ளைகளின் வாழ்க்கைத்தொழிற் பயிற்சிக்காக வழங்கப்பட்டது. அதற்காக அம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் சமூக சேவை உதவிப் பணிப்பாளர் திரு. கமகே முன்னின்று செயலாற்றியுள்ளார்.

அதன் பிரகாரம் 1981ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி சமூக சேவை திணைக்களத்தின் வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனமாக முல்கிரிகல பாராளுமன்ற உறுப்பினர் டி.டீ. பிரான்சிஸ்கு அவர்களின் தலைமையில் சமூக சேவைகள் அமைச்சர் கௌரவ அசோக்க கருணாரத்ன இந்த நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். பின்னர் சமூக சேவைகள் திணைக்களத்திற்கு இந்த நிறுவனத்தை நடத்துவது கஷ்டமாக இருந்ததால் சர்வோதய அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. சர்வோதய இயக்கத்தினால் சுமார் 10 வருடங்கள் வாழ்க்கைத்தொழிற் பயிற்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் 1992.02.09ஆம் திகதி சமூக சேவைகள் பணிப்பாளர் திரு. என்.டப்ளியு.ஈ. விஜேரத்ன இந்த நிறுவனத்தை மீண்டும் சமூக சேவைகள் திணைக்களத்திற்குப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தற்போது செயற்படுத்தப்படும் பாடநெறிகள்

பயண வழி

  • நிலையப் பொறுப்பதிகாரி,
    தெலம்புயாய வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிறுவனம்,
    தெலம்புயாய, அங்குணகொலபெலஸ்ஸ.
  • +94 473 489 296
  • +94 473 489 296
  • thelembuyayevtc[at]gmail.com