நோக்கு

வெற்றிகரமான வாழ்க்கைத்தொழிற் பயிற்சியின் மூலம் எதிர்கால சுபீட்சத்தை ஏற்படுத்துதல்

செயற்பணி

விசேட தேவையுள்ளவர்களை அடையாளம் காணுதல், புனர்வாழ்வு மற்றும் வாழ்க்கைத்தொழிற் பயிற்சியின் மூலம் ஆளுக்கு வலுவூட்டி சமூகமயப்படுத்துவதன் ஊடாக பொருளாதாரத்திற்கு பங்களிப்புச்செய்துகொள்ளுதல்

வரலாறு

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மத்திய மலைநாட்டில் செங்கடகல இராஜதானியில் தும்பறைப் பள்ளத்தாக்கில் மனங்கவரும் மலைத் தொடரினால் சூழப்பட்ட சுந்தரமான சூழலில் இந்தப் பயிற்சி நிலையம் அமைந்துள்ளது.

வள்ளலொருவர் நன்கொடையாகக் கொடுத்த காணியில் அமைக்கப்பட்ட மிகச்சிறிய மூன்று கட்டிடங்களில் 1963.02.15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் ஆரம்பத்தில் கட்புலனற்றவர்களுக்காக துணி நெய்யும் பயிற்சியொன்றுடன் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டு இன்று தற்கால சந்தையை இலக்காகக் கொண்டு நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி முறைசார்ந்த மற்றும் ஒழுங்குமுறையான 10 பயிற்சிநெறிகள் சிறந்த திறமையுள்ள போதனாசிரியர்களால் நடத்தப்படுகிற்னது. இதில் விசேட தேவைகள் உள்ள ஆண், பெண் பயிலுநர்கள் 100க்கு மேற்பட்டவர்களுக்கு வதிவிட வாழ்க்கைத்தொழிற் பயிற்சியை வழங்குவதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து தமது நோக்கத்தையும் இலக்குகளையும் வெற்றிகொள்ளுவதற்கான எதிர்பார்ப்புடன் வருகைதருகின்ற விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கு அவர்களின் உடல் உள சக்திகளை வளர்த்துக்கொள்ளுவதற்காக பல்வேறு செயற்பாடுகளைக் கொண்டு தமது எதிர்காலத்தை செப்பனிட்டுக்கொள்ளுவதற்கு இந்த நிலையம் ஒரு சிறந்த உறைவிடமாக இருக்கின்றது.

சமூக சேவைகள் திணைக்களத்தில் உள்ள முன்னணி நிறுவனமான இந்த நிறுவனத்தில் தேசிய அடிப்படையிலும் சர்வதேச அடிப்படையிலும் திறன்கள் உள்ள ஆடல், பாடல் விளையாட்டுத்திறன்கள் என்பவற்றில் நாட்டில் வெற்றி முரசுகொட்டிய இளைஞர் யுவதிகள் 2386 பேர் அளவில் பயிற்சி பெற்றுள்ளனர்.

சுவாதீனமாக எவரிடமும் கையேந்தாமல் நாட்டின் பொருளாதாரத்திற்கு தமது பங்களிப்பை வழங்குவதற்காக அவர்கள் எப்பொழுதும் தயாராக இருக்கின்றனர் என்பதை பெருமதிப்புடன் குறிப்பிடுகின்றேன்.

தற்போது செயற்படுத்தப்படும் பாடநெறிகள்

பயண வழி

கண்டியிலிருந்து வத்துகாமம் நகரத்தைக் கடந்து பன்வில பாதையில் 3.3 கிலோ மீற்றர் தூரத்தில் சென்றால் வாவின்ன சந்தி வரும். அதிலிருந்து பன்வில நோக்கி 400 மீற்றர் தூரத்தில் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது.

  • நிலையப் பொறுப்பதிகாரி,
    வத்துகாமம் வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனம்,
    வாவின்ன, வத்துகாமம்.
  • +94 812 476 209
  • +94 812 476 209
  • socialservices.vtiwattegama[at]gmail.com