நோக்கு

மாற்றுத்திறனுள்ள நபர்களுக்கு சமூகத்தில் சம சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல்

செயற்பணி

மாற்றுத்திறனுள்ள நபர்களுக்கு வாழ்க்கைத் தொழிற் பயிற்சி மற்றும் புனர்வாழ்வு என்பவற்றை அளிப்பதன்மூலம் சிறந்த பொருளாதார மற்றும் சமூக நிலைகளை சமூகத்தில் ஏற்படுத்துதல்

வரலாறு

1912  ஆம் ஆண்டில் மிஷனரிகள், இரத்மலான  செவிப்புலனற்றவர் பாடசாலையினையும், இராகம செவிப்புலனற்றவர் பாடசாலையினையும் மற்றும் 1956 ஆம் ஆண்டில் கைதடியில் காது கேளாத ஊமைகளுக்கான பாடசாலையினையும்  ஆரம்பித்தனர். இங்கிலாந்தில் உள்ள ஷெனனா மிஷனரி அமைப்பால் தொடங்கப்பட்ட பள்ளிகளின் கீழ் ஒரு தொழில்துறை பட்டறையாக  விழிப்புலனற்ற மற்றும் செவிப்புலனற்ற  நபர்களுக்கான சேவைகளினை வழங்குவதற்கு இச்சீதுவ நிறுவனம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1956 ஒக்டோபர் மாதம் 01 ஆந் திகதி இந்நிறுவனம் அரசுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது செயற்படுத்தப்படும் பாடநெறிகள்

பயண வழி

கொழும்பு - நீர்கொழும்பு வீதியில், சீதுவ சந்தியைக் கடந்து நீர்கொழும்பு நோக்கி 2.8 கிலோ மீற்றர் செல்லும்போது சந்திக்கின்ற லியனகேமுள்ள கிராமத்தில் வலப்பக்கம் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.

  • நிலையப் பொறுப்பதிகாரி,
    சீதுவ வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனம்,
    லியனகேமுள்ள, சீதுவ.
  • +94 112 253 503
  • +94 112 253 503
  • vtcseeduwasrilanka[at]gmail.com