தேசியத் தன்னார்வத் தொண்டு அலுவலகம்

அவ்வேளையிலிருந்த விடய அமைச்சு,  இலங்கையின் சமூக வலுவூட்டல் மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சு, ஐக்கிய நாடுகளின்  தன்னார்வத்  தொண்டர்களுக்கிடையேயான (UNV)  ஒத்துழைப்புடன், அரச, பாரம்பரிய, அரச சார்பற்ற அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் (CSO),  தன்னார்வத் தொண்டு தொடர்பிலான அமைப்புக்கள், இளைஞர் குழுக்கள் மற்றும் பிரத்தியேகப் பிரிவினால். தன்னார்வத் தொண்டு தொடர்பிலான தேசியக் கொள்கையின் முதலாவது  வரைவு  2014  ஆம் ஆண்டில்  ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டது

2030 தொலைநோக்கின் கீழ் நிலைபேறான அபிவிருத்தி இலக்கினை அடைவதற்கு பங்களிப்புச் செய்யும் சமூகப் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தியினை  மேம்படுத்துவதற்கு  இலங்கை அரசு வழங்கும் அர்ப்பணிப்பின் கீழ்  2019 ஆகஸ்டு 6 ஆந் திகதி தன்னார்வத் தொண்டு தொடர்லான தேசியக் கொள்கை அங்கீகரிக்கப்பட்டது. இது இலங்கையின் தன்னார்வத் துறைக்கு உன்னதமான வெற்றியொன்றாகும். கொள்கையினை அமுலாக்குவதற்கு  நாட்டினுள் அமைப்புசார்  தன்னார்வத் தொண்டினை மேம்படுத்துதல், ஒருங்கிணைத்தல், வலுவூட்டுதல் மற்றும் நிறுவுதல் தொடர்பில் தேசிய மட்டத்தில் தலையீடு செய்வதை உறுதிப்படுத்துவதற்குத் தேசிய தன்னார்வத் தொண்டு செயலகத்தினை (NVS) அமைத்தல் அவசியமாகும்.

நாட்டினுள் தன்னார்வ முயற்சிகள் தொடர்பிலான ஒருங்கிணைப்பு நிறுவனமொன்றாக செயற்படுதல், உரிய தன்னார்வத் தொண்டு தொடர்பிலான அமைப்புக்களினால் விதிக்கப்பட்டவாறு தன்னார்வத் தொண்டர்கள் உரிய தன்னார்வ வாய்ப்புக்களுடன் தொடர்புடுத்துவதற்கு  தேசிய தன்னார்வத் தொண்டு செயலகம்  தற்போது சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ்  அமைக்கப்பட்டுள்ளது.  தன்னார்வத் தொண்டினூடான  தேசியக் கொள்கை  வரைவு – சுபீட்சத்தின் செழிப்பான அற்புதமான தோற்றமாக வலுவூட்டப்பட்டுள்ளது என்பதை சமூக சேவைகள் திணைக்களம் திடமாக நம்புகின்றது.   இச் செயற்பாடுகளினை விளைத்திறனுடன் முன்னெடுத்தல் மற்றும் நாட்டினுள் தன்னார்வத் தொண்டுடன் தொடர்பிலான தரவுகளினை ஆராய்வதற்கு தன்னார்வ முகாமைத்துவ திட்டமொன்று, மொரட்டுவ பல்கலைக்கழத்தின் கணனி விஞ்ஞானம், பொறியியல் திணைக்களம் மற்றும்  ஐக்கிய நாடுகளின் தன்னார்வத் தொண்டர்களுடன் இணைந்து அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

இலங்கையின் தன்னார்வ சேவை தொடர்பில் தேசியக் கொள்கையின் (2019) பிரகாரம்

தன்னார்வத் தொண்டு தொடர்பிலான  வரைவிலக்கணம்

மனித நலன்புரியினை முன்னிட்டு, எவ்வித பிரத்தியேப் பயனொன்றினையும் எதிர்பார்க்காது  இறுதிப் பயனாளிக்கு மேலதிக செலவொன்றும் ஏற்படாத வகையில்  சுய விருப்புடன் இடம்பெறும் சிறந்த பணியொன்றாகும்.

தன்னார்வத் தொண்டு தொடர்பிலான  வரைவிலக்கணம்

தன்னார்வத் தொண்டாளர் என்பதன் கருத்து –

அ. தன்னார்வத்துடன் பணியாற்றுவதற்கு விருப்பினைக் கொண்ட மற்றும் இக்கொள்கையில் குறிப்பிடப்பட்ட  தன்னார்வத் தொண்டு  தொடர்பில்  வரைவிலக்கணத்தினைப் புரிந்து கொண்டு செயற்படும்  வேண்டிய ஒரு இலங்கையர்.

ஆ. இந்நாட்டில் தங்கியிருப்பதற்கு உரிய அரச அதிகாரியின் அங்கீகாரத்தின் கீழ் தன்னார்வத்துடன் பணியாற்றுவதற்கு விருப்பினைக் காட்டும் மற்றும் இக்கொள்கையில் குறிப்பிடப்பட்ட  தன்னார்வத் தொண்டு  தொடர்பில்  வரைவிலக்கணத்தினைப் புரிந்து கொண்டு செயற்படுவதற்கு விருப்பினைக் காட்டும் வேண்டிய ஒரு வெளிநாட்டு    தன்னார்வலர்.