தமது குழந்தைக்கு ஏதேனும் ஊனம் இருப்பதாக அறிந்துகொண்ட பின்னர் பெற்றோர் போன்று முழு குடும்பமும் நிம்மதியிழந்த நிலைமைக்கு உள்ளாகும். ஆகவே ஊனமுள்ள பிள்ளைகளின் அபிவிருத்தியைப் போன்று பெற்றோர்களின் மனநிலை அபிவிருத்திக்கும் முற்கூட்டியே தலையிட்டு சேவைகளை வழங்குவதன் மூலம் ஆகக்கூடிய அபிவிருத்தியை அடைய முடியும் என்பது கல்விமான்களின் கருத்தாகும். மனோதத்துவ உளவளத்துணை ஊடாக பெற்றோர்களின் மனநிலையை உயர்த்துவதற்காகவும், மிகச் சிறுவயதிலிருந்து பொருத்தமான பல்வேறு சேவைகளை வழங்குவதன்மூலம் பிள்ளைகளின் ஆகக்கூடிய அபிவிருத்திக்கும் சிறுவர் வழிகாட்டல் நிலையத்தின்மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் ஊடாக 16 வயது வரையிலான சிறுவர்களின் சேவைகளை இணைப்பாக்கம் செய்து அவர்களின் கல்வி மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதையும் வயதுவந்த ஊனமுற்றுள்ள பிள்ளைகள் தொடர்பாக சமூக சேவைகள் திணைக்களத்தின் நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குவதும் இடம்பெறுகிறது.

நோக்கு

குடும்ப அங்கத்தினர்களினதும் பிரசைகளினதும் நெருக்கமான இடைத் தொடர்பை பேணி, இருக்கின்ற சக்திகளையும் வளங்களையும் ஆகக்கூடியளவில் பயன்படுத்தி விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கு மற்றவர்களுக்கு சமமாக வாழ்வதற்கு வசதியான சாதகமான சூழலை உருவாக்குதல்

செயற்பணி

பெற்றோர்களும் குடும்ப அங்கத்தினர்களும் சவால்களுக்கு பெருமிதத்துடன் முகம்கொடுப்பதற்காக வலுவூட்டி, விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளின் ஆகக்கூடிய அபிவிருத்திக்கு முற்கூட்டியே தலையிட்டு, ஊக்கமளித்து, சரியான நேரத்தில் நெருங்கக்கூடிய சேவை வலையமைப்பை உருவாக்குதல் மற்றும் இணைப்பாக்கம் செய்வதற்காக இடையீட்டாளராக செயலாற்றி சேவை பெறுநர்களை மகிழ்ச்சியடையச்செய்தல்

வரலாறு

இலங்கையில் வாழ்கின்ற பல்வேறு ஊனமுற்ற பிள்ளைகளின் முன்னிளம் பருவத்தை அபிவிருத்தி செய்வதற்காக 1994ஆம் ஆண்டிலிருந்து ஜய்கா (JICA) நிறுவனத்தின் தொழில்நுட்ப அனுசரணையின் கீழ் நாடு முழுவதிலும் அமைந்துள்ள அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கு உதவியளிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று சமூக சேவைகள் திணைக்களத்தின்மூலம் செயற்படுத்தப்பட்டது.

அதன் கீழ் முன்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது செயற்படுத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களில் இருந்த குறைபாடுகளை குறைத்து தரமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கத்தில் ஜப்பானில் வாழ்கின்ற பல்வேறு ஊனமுள்ள பிள்ளைகளுக்காக ஆரம்பிக்கப்படுகின்ற சுகாதார, கல்வி மற்றும் சமூக நலனோம்பல் சேவைகள் தொடர்பாக கற்றுக்கொள்ளுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் பெறுபேறாக சிறுவர் வழிகாட்டல் நிலையத்தை மையமாகக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்காக சேவை வழங்குவதற்கு முற்கூட்டியே தலையிடும் நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த சிறுவர் வழிகாட்டல் எண்ணக்கரு 2003இல் மஹரகமையில் நிறுவப்பட்டது.

சிறுவர் வழிகாட்டல் நிலையத்தின் சேவைகளின் தனித்துவமான தன்மை

  • மிகச் சிறு வயதிலிருந்து சேவைகளை வழங்குவதற்கு தலையிடல் (03 மாதத்திலிருந்து)
  • உடல், உள மற்றும் ஏனைய முக்கியமான சிக்கல்கள் உள்ள எந்தவொரு பிள்ளைக்கும் சேவை வழங்குதல்.
  • பல்வகை தொழில் சேவைகள் ஊடாக பிள்ளைகளை அபிவிருத்தி செய்வதற்குத் தலையிடல். (Multi-Disciplinary Team Work)
  • சேவை பெறும் பிள்ளைகளுக்காக தனித்துவமான செயல்முறைகளுக்கு அமைவாக சேவைகளை வழங்குதல். (Individual Assessment - Progress Review)
  • ஒவ்வொரு பிள்ளைக்கும் தனிநபர் அபிவிருத்தி திட்டத்தின் பிரகாரம் (IEP - Individual Education Plan) சேவைகளை வழங்குதல்.
  • அடிப்படை திறன்களை விருத்திசெய்ததன் பின்னர் முன்பள்ளிக்கும் முறைசார்ந்த பாடசாலைகளுக்கும் அனுப்புதல்.
  • தினசரி வாழ்க்கை திறனை அபிவிருத்தி செய்வதில் அடிப்படை கவனம் செலுத்துதல்.
  • முன்பள்ளிகள் மற்றும் முறைசார்ந்த கல்வியில் ஈடுபடுத்திய பிள்ளைகளுக்கு பின்பொறுப்பு சேவைகளை வழங்குதல்.
  • தகைமைகளும் அனுபவமும் உள்ள பணியாட் தொகுதியொன்று சேவையாற்றுதல்.
  • ஒவ்வொரு பிரிவு தொடர்பாக கவனம் செலுத்துகின்ற பரிபூரண அணுகுமுறை (சேவை பெறும் பிள்ளைகள்/ பெற்றோர்கள்/ குடும்ப அங்கத்தினர்கள்/ பிரசைகள்) Holistic Approach

வழங்கப்படுகின்ற சேவைகள்

  • விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்காக,
    • விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்காக,
    • கல்வி சேவை
    • புனர்வாழ்வு சேவை (பேச்சு நோய் ஆய்வு/ தொழில் நோய் ஆய்வு/ உடல் பிடித்துவிடும் சிகிச்சை)
    • இசை, நடனம், பேன்ட் இசை போன்ற அழகியல் பயிற்சி வகுப்புகள்
    • தேசிய அடிப்படையிலான நிகழ்ச்சித்திட்டங்களுக்கு பயிற்சியளித்தல்
    • முன்பள்ளிக்கு/ முறைசார்ந்த பாடசாலைகளுக்கு அனுப்புதல்
    • சுகாதார சிகிச்சை நிலையங்கள்
    • ஒன்றுகூடல்
    • பல்வகை ஊனங்கள் உள்ள பிள்ளைகளுக்கான வகுப்புகள்
    • முன்பள்ளிக்கும் முறைசார்ந்த பாடசாலைகளுக்கும் அனுப்பப்பட்ட பிள்ளைகளுக்கு 16 வயதுவரை பின்பொறுப்பு சேவைகள்
    • மாதாந்த பிறந்தநாள் விருந்துபசாரங்களை நடத்துதல்
  • பெற்றோர்களுக்கும் குடும்ப அங்கத்தினர்களுக்கும்
    • மனநிலை அபிவருத்திக்காக மனோதத்துவ/ உளவளத்துணை சேவைகள்
    • சுகாதார கல்வி சேவைகள் நிகழ்ச்சித்திட்டங்கள்
    • சமய நிகழ்ச்சித்திட்டங்கள்
      • சீல தியான நிகழ்ச்சித்திட்டங்கள்
      • நத்தார் கொண்டாட்டம்
      • பிரதான மத வணக்கஸ்தலங்களை வழிபடல்
      • கல்வி மற்றும் உல்லாச சுற்றுலா
    • இயற்கை சிகிச்சை அக்கடமியின் கீழ் உள்ளக மற்றும் வெளி நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்
    • குடும்பங்களின் சகோதர சகோதரிகளுக்காக நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்
  • பிரசைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள்
    • முன்பள்ளி ஆசியரி பயிற்சி. (இடையீடு மற்றும் விசேட கல்வி)
    • சிறுவர் வழிகாட்டல் நிலையத்தை ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துதல்
    • அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் பணியாட் தொகுதியினருக்கு அறிவூட்டல்
    • உள்நாட்டு வெளிநாட்டு தொழில்புரிவோருக்கு தகவல்களையும் சேவைகளையும் வழங்குதல்
    • அரச கொள்கைகளைத் தயாரிப்பதற்கு பங்களிப்புச்செய்தல்

பயண வழி

மஹரகம - நுகேகொட 119 பேருந்து பாதையில், நாவின்ன சுதேச மருத்துவ நிலையத்தைக் கடந்து பத்திரகொட பாதையில் சுமார் 500 மீற்றர் வந்து, சமாஜ பாதையில் சுமார் 100 மீற்றர் வரும்போது, வெல வீதியில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.

  • நிலையப் பொறுப்பதிகாரி,
    சிறுவர் வழிகாட்டல் நிலையம்,
    இல. 11, வெல வீதி, மஹரகம.
  • +94 112 746 801
  • -
  • cgcmaharagama[at]gmail.com