சமுதாய அடிப்படையிலான புனர்வாழ்வு என்பது அங்கவீனமுற்ற நபர்கள் மற்றும் குடும்பங்களினை வலுவூட்டுவதற்குத் தேவையான சேவைகளினை மேம்படுத்தி அவர்களுக்கு சம வாய்ப்புக்களினை வழங்குதல், அவர்களின் மனித உரிமைகளினைப் பாதுகாத்து அங்கவீனமுற்ற நபர்களினை உடல், உள மற்றும் சமூக ரீதியில்  விழித்தெழச் செய்தல்.

அங்கவீனமுற்ற நபர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்கள் வாழும் சமுதாயத்திற்கிடையே  தொடர்புகளினை ஏற்படுத்துதல், சமுதாய அடிப்படையிலான புனர்வாழ்வு எண்ணக்கருவின் அடிப்படை நோக்காகும்.

அது தொடர்பில் சகல நபர்கள், அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் அத்தியாவசியமாகும்.  விசேடமாக  சமூக சேவைகள், கல்வி, சுகாதாரம், சட்டம் உட்பட சகல பிரிவுகளும் இணைந்து செயற்படுதல் அவசியமாவதுடன், அங்கவீனமுற்ற நபர்களின் தேவைப்பாட்டின் பிரகாரம் அந்தந்த பிரிவுகளினூடாக வழங்கப்படும் சேவைகளினை ஒருங்கிணைப்பு செய்தல்  வேண்டும்.

இது கிராம மட்டத்திலிருந்து  ஒன்றிணைந்த நிகழ்ச்சித் திட்டமாக அமுலாக்கப்படும் என்பதுடன், அங்கவீனமுற்ற நபர்களின் தேவைகளினை இனங்கண்டு அத்தேவைப்பாடுகளுக்கு உகந்தவாறான திட்டமொன்றின் பிரகாரம் ஒவ்வொரு அங்கவீனமுற்ற நபர்களுக்காகவும் புனர்வாழ்வுச் செயற்பாட்டினை ஆரம்பிப்பது இடம்பெறுகிறது.

தத்தமது குடும்பத்தினுள் ஆரம்பிக்கப்படும் புனர்வாழ்வுச் செயற்பாடு தொடர்பில் கிராமியக் குழுக்கள், பிராந்திய வழிநடத்தல் குழுக்கள், மாவட்ட வழிநடத்தல் குழுக்கள் மற்றும் தேசிய வழிநடத்தல் குழுக்களின் பங்களிப்பு பெற்றுக் கொள்ளப்படும் என்பதுடன், அங்கவீனமுற்ற நபர்கள் சுயாதீனமான நிலைமைக்கு வரும் வரை இக்குழுக்களினூடாக  தேவையான உதவி மற்றும் வழிகாட்டலினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமுலாக்கப்படும் கிராமிய மற்றும் பிராந்திய வழிநடத்தல் குழுக்கள் தொடர்பிலான தகவல்களினை  தாங்கள் வசிக்கும் பிரதேச செயலகப் பிரிவின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்/அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

செயற்பாடுகள்

  1. கிராமிய, பிராந்திய, மாவட்ட மற்றும் தேசிய மட்டத்திலான அங்கவீனமுற்ற சமுதாயம் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களினை ஒருங்கிணைத்தல் மற்றும் ஒழுங்கமைத்தல்.
  2. அங்கவீனமுற்ற சமுதாயத்தின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தினை உறுதிப்படுத்துவதற்கு அங்கவீனமுற்ற நபர்கள், அவர்களின் குடும்பங்களின் அங்கத்தவர்கள் மற்றும் உதவிக் குழுக்களினை வலுவூட்டுதல்.
  • அங்கவீனமுற்ற நபர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு கருத்திட்டங்களினை அமுலாக்குதல் மற்றும் நிதிசார் உதவிகளினை வழங்குதல்.
  1. அங்கவீனமுற்ற சமுதாயம், குடும்பங்கள், உதவிக் குழுக்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சியளித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.
  2. அங்கவீனமுற்ற நபர்கள் தொடர்பிலான தரவுத் திட்டமொன்றினை முன்னெடுத்தல் மற்றும் நாளதுவரைப்படுத்துதல்.
  3. அங்கவீனமுற்ற நபர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கு அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களினை ஒருங்கிணைப்புச் செய்தல்.

உலக சுகாதார அமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீ.பீ.ஆர்.மெட்றிக் (CBR – Metrix)

New Picture 3