கட்புலனற்ற நிலைக்குள்ளாகின்ற நபர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குதல், புனர்வாழ்வளித்தல் நிவாரணம் வழங்குதல் என்பவை இந்த நிதியத்தின் செயற்பாடாகும். இலங்கையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான புதிய மனோபாவம் 1981ஆம் ஆண்டை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் ஆண்டாகப் பிரகடனப்படுத்தியதை அடுத்து படிப்படியாக ஆரம்பமானது. அதன் பிரகாரம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தின் மூலம் 1992ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க கட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம் என்ற பெயரில் சட்டமொன்று அங்கீகரிக்கப்பட்டு அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தோடு இணைந்ததாக இலங்கையில் வாழ்கின்ற கட்புலனற்ற நபர்களுக்காக பல்வேறு சேவைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செயற்பாடுகள்

  • விளையாட்டு நடவடிக்கைகளை நடத்துதல் மற்றும் மேம்படுத்துவதற்கு நன்கொடைகளை வழங்குதல்
  • கட்புலனற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாணவர் உதவி கொடைகளை வழங்குதல்
  • உயர் தரத்தில் கல்வி கற்கின்ற கட்புலனற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குதல்
  • குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுக்கு இலவசமாக கண் குவிவில்லைகளை வழங்குதல்
  • கண் சிகிச்சைக்கு கொடைகளை வழங்குதல்
  • தேவையின் அடிப்படையில் நிதியத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக பல்வேறு செலவுகளைச் செய்தல்
  • இயங்குதல் மற்றும் திசைமுகப்படுத்துதல் தொடர்பான பயிற்சியை வழங்குவதற்காக உளவளத்துணை கொடுப்பனவுகளைச் செலுத்துதல்
  • கட்புலனற்றவர்களுக்காக கல்வி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி வசதிகளை வழங்குதல்
  • கட்புலனற்றவர்களுக்காக வேலையிலீடுபடும் வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு சுயதொழில்களுக்காக நிதியுதவிகளையும் வழிகாட்டல்களையும் வழங்குதல்
  • சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை தேசிய ரீதியாகக் கொண்டாடுதல். (ஒக்ரோபர் 15)
  • முதலாம் தரத்திலிருந்து க.பொ.த. (சா/த) வரை பாடசாலை கல்வியைப் பெறுகின்ற கட்புலனற்ற மாணவர்களுக்கு மாணவர் உதவி கொடைகளை வழங்குதல்
  • லுவி பிறேல் புலமைப்பரிசு வழங்கும்போது (கட்புலனற்ற குறைந்த வருமானமுள்ள பெற்றேர்களின் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு மாணவர் உதவி கொடைகளை வழங்குதல்
  • கட்புலனற்றவர்களுக்காக செயற்படுகின்ற பல்வேறு புனர்வாழ்வு கருத்திட்டங்களுக்கு நன்கொடைகளை வழங்குதல்