இலங்கையில் 2012 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட குடிசன மதிப்பீட்டின் பிரகாரம், செவிப்புலனற்ற மற்றும் பகுதியளவிலான செவிப்புலனற்ற நபர்களின் எண்ணிக்கை 389,077 ஆகும் என்பதுடன், தொடர்பாடலில் சிக்கலினைக் கொண்ட நபர்களின் எண்ணிக்கை 180,833 ஆகும். இத் தொகுதினருக்கு, ஆன்மீகம்சார், சமூகம் மற்றும் கலாசாரம்சார் சேவைகளினை வழங்குவதற்கும் அதேபோல மருத்துவம், சுகாதாரதம் மற்றும் அன்றாட வசதிகளினை வழங்குவதற்குமான தொடர்பாடல் ஊடகமாக சைகைமொழி  விளங்குகிறது. இச்சைகை மொழி நாட்டினுள் அங்கீகரிக்கப்பட்ட மொழியொன்றாக 2010.09.05 ஆந் திகதி அமைச்சரவைக் கொள்கைசார் தீர்மானத்தினூடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சைகை மொழிபெயர்ப்புச் சேவையினை வழங்குவதற்கு தற்போது திணைக்களத்திற்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள 06 சைகை மொழிபெயர்ப்பாளரினூடாக சேவை  வழங்கப்படுகிறது. செவிப்புலனற்ற நபர்களின் தொடர்பாடல் தொடர்பில் அரச நிறுவனங்களில் தேவையான உதவியினைப் பெற்றுக் கொள்ளுவதற்கு அவ் உத்தியோகத்தர்களின் சேவையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், மருத்துவசாலைகள் மற்றும் பிற அரச நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரிலும் மற்றும் பிரத்தியே நிறுவனங்களின்  செவிப்புலனற்ற நபர்களின் தொடர்பாடல்  தேவைப்பாடுகளுக்காகவும்  இச் சைகைமொழி பெயர்ப்பாளர்களின் உதவியினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நாட்டின் ஒட்டுமொத்தமான  செவிப்புலனற்ற சமுதாயமும்  தகவல்களினைப் பெற்றுக் கொள்ளுவதை இலகுபடுத்தும் நோக்குடன் அன்றாடம் தேசிய  தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு முக்கிய செய்தி ஒளிபரப்பிலும், வேண்டுகோளுக்கமைவாக  பிரத்தியேக  ஊடகத்திலும்  இச்சைகை மொழி பெயர்ப்பாளர்களின் சேவை  வழங்கப்படுகிறது.