செவிப்புலனற்ற நபர்களின் அடையாளத்தினை உறுதிப்படுத்துவதற்கு  செவிப்புலனற்ற 03 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது.

இது தொடர்பில் 3 செ,மீ x 2.5 செ.மீ. அளவில (தேசிய அடையாள அட்டை அளவில்) 03 வர்ணப் புகைப்படங்கள் அவசியம் என்பதுடன், அதில் 02 புகைப்படங்களினை ஒரு உறையில் இணைத்து விண்ணப்பப் படிவத்துடன் முன்வைத்தல் வேண்டும். 

மற்றைய புகைப்படத்தினை, விண்ணப்பத்தின் உரிய இடத்தில் ஒட்டி அதன் கீழ் பின்வரும் உத்தியோகத்தர்களினுள் ஒருவரினூடாக இறப்பர் முத்திரையிடப்பட்டு உறுதிப்படுத்துதல் இடம்பெறுதல் வேண்டும்.

  1. பிரதேச விண்ணப்பதாரராக இருப்பின், பிரதேச செயலாளர்/சமூக சேவைகள் உத்தியோகத்தர்/அபிவிருத்தி உத்தியோகத்தர் (சமூக சேவைகள்)/கிராம உத்தியோகத்தரினூடாக
  2. பாடசாலை விண்ணப்பதாரராக இருப்பின் அதிபரினூடாக
  3. வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனமொன்றின் பயிலுனராக இருப்பின், சமூக நலன்புரி அத்தியட்சகர்/நிலையப் பொறுப்பு உத்தியோகத்தரினூடாக.

செவிப்புலனற்றவர் என்பதை உறுதிப்படுத்தும்வேளையில் மருத்துவச் சான்றிதழ் முன்வைக்கப்படுதல்  வேண்டும்.

அவ்வாறு மருத்துவச் சான்றிழினை முன்வைப்பதற்கு தவறும் பட்சத்தில் செவிப்புலனற்ற ஒருவர் என்பதை உறுதிப்படுத்துவதற்காக பின்வரும்  ஆவணங்களில் ஆகக்குறைந்தது ஒன்றையாவது முன்வைத்தல் வேண்டும்.

  1. செவிப்புலனற்ற நபர் என்பதற்கு பாடசாலை அல்லது வாழ்க்கைத் தொழிற் பயிற்சியொன்றில் கல்வி பெற்றுள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்.
  2. அங்கீகரிக்கப்பட்ட செவிப்புலனற்றவர்களுக்கான அமைப்புக்களின் செயலாளர் அல்லது தவிசாரளின் எழுத்துமூலச் சான்றிதழ்.
  3. செவிப்புலனற்ற நபர் என்பதை உறுதிப்படுத்துவதற்கு கிராம உத்தியோகத்தரினால் வழங்கப்படும் கடிதம்.

இவ் அடையாள அட்டைகளினை வழங்குவதற்கு எவ்வித கட்டணமொன்றும் அறவிடப்பட மாட்டாது.

பிரதேச செயலகங்களுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள சமூக சேவைகள் திணைக்களத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் அல்லது அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமிருந்து மேலதிகத் தகவல்களினைப் பெற்றுக்கொள்ள முடியும்.