நோயாளிகளுக்கான நலன்புரிச் சேவைகளினை வழங்குதல்

அரச மருத்துவசாலைகளுக்கு வருகைதரும் குறைந்த வருமானப் பயனாளிகளான  நோயாளர்களின் நலன்புரி வசதிகளினை வழங்குவதற்கு சமூக சேவைகள் திணைக்களத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (சமூக சேவைகள்) அரசின் பல  ஆதார வைத்தியசாலைகளுக்கு  முழுநேரமும் மற்றும் பகுதிநேரமும் என்றவாறு இணைப்புச் செய்யப்பட்டுள்ளனர்.   இவ்வாறு இணைப்புச் செய்யப்பட்டுள்ள உத்தியோகத்தர்களினால்   வைத்தியசாலைகளில் தங்கியிருக்கும் குறைந்த வருமானப் பயனாளிகளான  நோயாளர்களின்  நலன்புரிச் செயற்பாடுகள் மற்றும் அவர்களின் பின்னணிச் செயற்பாடுகள் தொடர்பில் நாடுபூராவுமுள்ள  பல்வேறு நிறுவனங்கள், திணைக்களங்கள், பங்குதாரர்கள் மற்றும் மற்றும் பிரதேச செயலகங்களுடன்  உள்ளகத் தொடர்புகளினை முன்னெடுத்து  பின்வரும் நலன்புரிச் செயற்பாடுகளினை நிறைவேற்றுவதற்கு நேரடியாகத் தலையிடுகின்றனர்.

  1. மருத்துவ உதவிகளினை வழங்குதல் தொடர்பில் ஒருங்கிணைப்பினைச் செய்தல்.
  2. மருத்துவசாலைகளில் தங்கியிருக்கும் அங்கவீனமுற்ற நபர்களுக்கு தேவையான உதவி உபகரணங்களினை விரைவில் வழங்குவதற்கு ஒருங்கிணைப்பினைச் செய்தல்.
  • மருத்துவசாலைகளில் தங்கியிருக்கும் அங்கவீனமுற்ற நபர்களின் வீடுகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தேவைகள் தொடர்பில் மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைப்பினைச் செய்தல்.