பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்குத்  தேவையான சேவைகளினை வழங்குதல், புனர்வாழ்வளித்தல் மற்றும் நிவாரணங்களினை வழங்குவதை  நோக்கமாகக் கொண்டு நிதியத்தினை ஸ்தாபித்தல் இடம்பெற்றுள்ளது. இலங்கையினுள் அங்கவீனத்தினைக் கொண்ட நபர்கள் தொடர்பிலான புதிய எண்ணக்கரு வளர்ச்சி 1981  ஆம் ஆண்டு சர்வதேச அங்கவீனர் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டவேளை ஆரம்பமானது. அதன் பிரகாரம், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்  பாராளுமன்றத்தினூடாக 1992  ஆம் ஆண்டின் 09  ஆம் இலக்க  விழிப்புலனற்றவர்களுக்கான புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம் என்ற பெயரில் சட்டம் நிறைவேற்றப்பட்டு அரச வர்த்தமானி அறிவித்தலொன்றினூடாக  பிரகடனஞ்  செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு இணையாக  இலங்கையில் வாழும் விழிப்புலனற்ற நபர்களுக்கென பல்வேறு சேவைகள் இதுவரை  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செயற்பாடுகள்

  1. விளையாட்டுச் செயற்பாடுகளினை முன்னெடுத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கு அங்கவீனமுற்ற நபர்கள் மற்றும் சங்கங்களுக்கு உதவிகளினை வழங்குதல்.
  2. பின்வரும் மாணவர் குழுக்களுக்குப் புலமைப்பரிசில்களினை வழங்குதல்.
    1. விழிப்புலனற்ற பல்கலைக்கழக மாவணர்வகள்
    2. விழிப்புலனற்ற உயர் கல்வியினைத் தொடரும் மாணவர்கள்
  • III. முதலாவது வருடம் தொடக்கம் க.பொ.த. (சா.த.) வரையான விழிப்புலனற்ற மாணவர்கள்.
  1. விழிப்புலனற்ற குறைந்த வருமானப் பயனாளிகளான பெற்றோர்களின் பாடசாலை செல்லும் பார்வையற்ற  பிள்ளைகளுக்கு  லுவிபிரெய்ல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உதவுதொகை வழங்குதல்.
  • கண் சிகிச்சைகளுக்கு உதவிகளினை வழங்குதல்.
  1. விழிப்புலனற்ற நபர்கள் தொடர்பில் செயற்படுத்தப்படும் பல்வேறு புனர்வாழ்வுச் செயற்திட்டங்களுக்கு உதவிகளினை வழங்குதல்.
  2. விழிப்புலனற்ற நபர்களுக்கு வாழ்க்கைத் தொழிற் பயிற்சி வசதிகளினை வழங்குதல்.

ஒக்டோபர் மாதம் 15  ஆந் திகதி  நினைவுகூரப்படும்  சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்புத் தினத்தினைக்  கொண்டாடுதல்.