முன்பிள்ளைப் பருவ விருத்தி

சமூக சேவைகள் திணைக்களம், இலங்கையில் வசிக்கும் பல்வேறு அங்கவீனத்தினைக் கொண்ட பிள்ளைகளின் முன்பிள்ளைப் பருவத்தினை  விருத்தி செய்வதற்கு  தலையீடு செய்யும் தேசிய நிகழ்ச்சித் திட்டமொன்றினை அறிமுகப்படுத்தும் தேவைப்பாட்டினை நிறைவு செய்வதற்கு கொழும்பு மாவட்டத்தினை அடிப்படையாகக் கொண்ட முன்மாதிரியான கருத்திட்டமொன்றினை  2003 ஆம் ஆண்டில் ஆரம்பித்துள்ளதுடன், அது மஹரகம, வெல வீதி, இலக்கம் 11, சிறுவர் வழிகாட்டி நிலையத்தினை மையமாகக் கொண்டு  அமுலாக்கப்படுகிறது.

கருத்திட்டத்தின் நோக்கங்கள்

  1. குழந்தைப் பருவ அங்கவீனங்களினை முன்கூட்டியே இனங்கண்டு அது தொடர்பில் தலையீடு செய்யும் மிகவும் பயனுள்ள முறையொன்றினை அறிமுகப்படுத்துதல்.
  2. அங்கவீனத்தினைக் கொண்ட பிள்ளைகளுக்குச் சேவைகளினை வழங்குதல் தொடர்பில் பல்வேறு துறைகளுடன் தொடர்பிலான நிறுவனங்களினை  உள்ளடக்கிய  சேவை வலையமைப்பினை வலுவூட்டுதல்.
  3. விசேட தேவைகளினைக் கொண்ட பிள்ளைகளின் குழந்தைப் பருவக் கல்வி மற்றும் உள்ளீர்ப்பினை வலுவூட்டுவதற்குத் தலையீடு செய்தல்.
  4. பெற்றோர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களின் உளத் தரத்தினை மிகவும் உன்னதமான நிலைமைக்குக் கொண்டு வந்து அது தொடர்பில் தலையிடுதல்.
  5. இக்கருத்திட்டத்தினை பிற மாவட்டங்களுக்கும் அறிமுகம் செய்தல்.

முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிறுவனத்தினூடாக  பின்வரும் சேவைகள் உங்களின் பிள்ளைகளுக்காக இலவசமாக வழங்கப்படுகிறது.

  1. அங்கவீனத்தினைக் கொண்ட பிள்ளைகளின் வளர்ச்சிக்காக தனிப்பட்ட, சிறு குழு மற்றும் குழு வகுப்புக்களினை நடாத்துதல்.
  2. பிசியோதெரபி, தொழில்முறை சிகிச்சை மற்றும் பேச்சு சிகிச்சை சேவைகளை வழங்குதல்.
  • விசேட பிள்ளைகளினை இலக்காகக் கொண்ட முன்பிள்ளைப் பருவ ஆசிரியர் பயிற்சிப் பாடநெறிகளினை நடாத்துதல்.
  1. பெற்றோர்களின் உளத் தரத்தினை மேம்படுத்துவதற்கு நிகழ்ச்சித் திட்டங்களினை நடாத்துதல்.
  2. சுகாதார சிகிச்சைகள் மற்றும் மனநல ஆலோசனைச் சேவைகளினை வழங்குதல்.
  3. கல்விசார் மற்றும் பொழுதுபோக்குச் சுற்றுலாக்கள்.

பிரதேச செயலகங்களுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள சமூக சேவைகள் திணைக்களத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் அல்லது அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமிருந்து மேலதிகத் தகவல்களினைப் பெற்றுக்கொள்ள முடியும்.