அங்கவீனமுற்ற நபர்களுக்கு வாழ்க்கைத் தொழிற் பயிற்சியினை வழங்குதல்.

அங்கவீனத்தினால் வருந்தும் இளைஞர்/யுவதிகளின் மனித உரிமைகளினைப் பாதுகாத்து, சுய மரியாதையுடன் சுயாதீனமாக நிற்கச் செய்வதற்கு வாய்ப்புக்களினை வழங்கி அவர்களினை தேசிய ஊழியப் படையின் செயலூக்கமான பங்குதாரர்களாக்குதல் இதன் நோக்கமாகும்.  அது தொடர்பில் அவர்களின்  இயலுமைகளினை மேம்படுத்தக்கூடியவாறு  வாழ்க்கைத் தொழில் செயற்பாடுகள் தொடர்பிலான பயிற்சியொன்றினை வழங்கி அதன் பின்னர் சமூகத்துடன் ஒன்றிணைத்தல் இடம்பெறுகிறது.

பிரதான மாவட்டங்கள் ஐந்திலுள்ள (05) வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் எட்டின் (08) கீழ் இந்நிகழ்ச்சித் திட்டம் அமுலாக்கப்படுகிறது.

மாவட்டம் பயிற்சி நிறுவனம்
கம்பகா சீதுவ வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனம்
அமுணுகும்புர வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனம்
இராகம வைத்தியசாலையுடன் இணைந்த வாழ்க்கைத்  தொழிற் பயிற்சி நிலையம்
கண்டி வத்தேகம வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனம்
கெட்டவல வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனம்
ஹம்பாந்தோட்டை தெலம்புயாய வாழ்க்கைத்  தொழிற் பயிற்சி நிறுவனம்
இரத்தினபுரி கலவான வாழ்க்கைத்  தொழிற் பயிற்சி நிறுவனம்
புத்தளம் மாதம்பே வாழ்க்கைத்  தொழிற் பயிற்சி நிறுவனம்
மட்டக்களப்பு வாழைச்சேனை  வாழ்க்கைத்  தொழிற் பயிற்சி நிறுவனம் (அங்குரார்ப்பணஞ் செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது)
திருகோணமலை திருகோணமலை  வாழ்க்கைத்  தொழிற் பயிற்சி நிறுவனம் (அங்குரார்ப்பணஞ் செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது)

 

தேவையான தகைமைகள்

  1. வயது - 16 – 35 வயதிற்கிடைப்பட்ட
  2. பின்வரும் அங்கவீனத்தினைக் கொண்ட நபர் ஒருவராக இருத்தல்.
    1. செவிப்புல மற்றும் வாய் பேசுவதில் குறைபாடு
    2. நடமாடுவதில் குறைபாடு
  • விழிப்புலனற்ற
  1. உள மந்தம் (மெதுவான உள வளர்ச்சி)
  2. வலிப்பு நோய்
  3. உளநோய்
  • பல்வேறு அங்கவீனம்

(தேவையேற்படும் வேளையில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர் ஒருவரின் மருத்துவச் சான்றிதழ் முன்வைக்கப்படுதல் வேண்டும்)

  1. அடிப்படை அன்றாடத் தேவைகளினைப் பூர்த்தி செய்வதற்கு முடிதல்.

தெரிவுசெய்யும் முறைமை

  1. வதியும் பிரதேச செயலகப் பிரிவின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் அல்லது அபிவிருத்தி உத்தியோக்தர் (சமூக சேவைகள்) ஊடாக விண்ணப்பங்களினைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
  2. சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களினை உரிய பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் அல்லது அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு (சமூக சேவைகள்) கையளித்தல் வேண்டும்.
  3. பிரதேச செயலகங்களுக்குக் கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களினை சமூக சேவைகள் திணைக்களத்திற்கு வழங்கியதன் பின்னர் முறைசார் நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டு பாடநெறிகள் தொடர்பில் பொருத்தமான பயிலுனர்கள் தெரிவு செய்யப்படுவர்.

வழங்கப்படும் வசதிகள்

  1. இலவசமாக உணவு பானங்கள், மருத்துவ மற்றும் விடுதி வசதிகளினை வழங்குதல்.
  2. பயிலுனர்களுக்கு நாளொன்றுக்கு ரூபா. 00 கொடுப்பனவினை வழங்குதல்.
  3. சீருடைகள், சாதாரண உடைகள், காலணிகள் மற்றும் சுகாதாரப் பொருட்களினை வழங்குதல்.
  4. வெற்றிகரமான பயிற்சியின் நிறைவில் சுய தொழில் தொடர்பில் ரூபா. 25,000.00 ஆகக்கூடிய பெறுமதியினைக் கொண்ட கருவித் தொகுதியினை வழங்குதல்.
  5. வாழ்க்கைத் தொழிற் பயிற்சிக்கு மேலதிகமாக வெளிப்புறச் செயற்பாடுகள்.
  1. தேசிய மட்டத்தில் விளையாட்டுகள் மற்றும் கலைச் செயற்பாடுகளுக்கு வாய்ப்பினை வழங்குதல்.
  2. பொழுதுபோக்குச் சுற்றுலாக்கள், தலைமைத்துவப் பயிற்சி, சைகை மொழிப் பயிற்சி, நெறிப்படுத்துதல் மற்றும் நடமாட்டப் பயிற்சியினை வழங்குதல்.
  1. பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பயிலுனர்களினைத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு ஒருங்கிணைப்பினைச் செய்தல்.

பிரதேச செயலகங்களுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள சமூக சேவைகள் திணைக்களத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் அல்லது அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமிருந்து மேலதிகத் தகவல்களினைப் பெற்றுக்கொள்ள முடியும்.