நோக்கு

2030 ஆம் ஆண்டாகின்ற போது ஓரங்கட்டப்பட்ட மற்றும் பாதகமான நிலைக்குள்ளாகியுள்ள பிரசைகளின் உரிமைகளும் சமத்துவமும் நிறைந்த பாதுகாப்பான இலங்கையை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ்தல்.

செயற்பணி

இலக்குக்குட்படுத்தப்பட்ட பிரசைகளின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் வலுவூட்டுதல் என்பவற்றின் ஊடாக சமூக இடையீட்டின் பொருட்டு நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்பாக்கம் மற்றும் தொழில்சார்ந்த தலையீடு என்பவற்றின் மூலம் புதிய உற்பத்திகளுக்குப் பிரவேசிப்பதன் ஊடாக விரைவான வினைதிறன்மிக்க மற்றும் பயனுறுதி மிக்க ஆராய்ச்சிகளை நடத்துதல், கொள்கைத் தயாரிப்பு மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் என்பவற்றின் ஊடாக எதிர்பார்க்கும் பெறுபேறுகளை அடைதல்.

நோக்கங்கள்

 

  1. 16 – 35 வயதிற்கிடைப்பட்ட அங்கவீனமுற்ற இளைஞர் யுவதிகளுக்கான வாழ்க்கைத் தொழிற் பயிற்சி மற்றும் வெளிப்புற செயற்பாடுகளினூடாக வாழ்க்கைத் திறனினை மேம்படுத்துதல்.
  2. பாதுகாப்புத் தேவையான பாதுகாவலர்களினை இழந்த மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கு முழுநேர விடுதிப் பாதுகாப்பினை வழங்குதல் மற்றும் திறன் விருத்தி.
  3. வயது 03 மாதம் தொடக்கம் 16 வயது வரையான பல்வேறான அங்கவீனத்தினால் வருந்தும் பிள்ளைகளின் அங்கவீன நிலைமையினைக் குறைத்தல் மற்றும் திறன் விருத்தி தொடர்பில் முன்கூட்டியே தலையீடு செய்தல்.
  4. அங்கவீனமுற்ற சமுதாயம் அன்றாட வாழ்க்கையில் முகங்கொடுக்கும் பல்வேறான பிரச்சினைகளினைக் குறைப்பற்கு தலையீடு செய்தல் மற்றும் வலுவூட்டுதல்.
  5. செவிப்புலனற்ற வாய்பேசாத நபர்களினை வலுவூட்டுதல்.
  6. போதைக்கு அடிமையானவர்களினை விடுதியில் வைத்துப் புனர்வாழ்வளித்தல், வாழ்க்கைத் தொழிற் பயிற்சி மற்றும் சமூகத்துடன் ஒன்றிணைத்தல்
  7. சமுதாய மட்டத்தில் போதை மீட்புத் தொடர்பில் தலையீடு செய்தல்.
  8. பல்வேறு சமகால சமூகப் பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சரியான வழிகாட்டலினை வழங்குவதற்கு ஆராய்ச்சிகளினை நடாத்துதல், தலையீடு செய்தல் மற்றும் கொள்கைகளினை வகுத்தல்.
  9. அங்கவீனமுற்ற நபர்களின் அழகியல் மற்றும் விளையாட்டுத் திறன்களினை மேம்படுத்துவதற்கு தேசிய நிகழ்ச்சித் திட்டங்களினை ஒருங்கிணைத்தல்.
  10. விழிப்புலனற்ற நபர்களினை வலுவூட்டுதல்.
  11. அங்கவீனமுற்ற நபர்களுக்குச் சேவைகளினை வழங்கும் தன்னார்வ அமைப்புக்களுக்கு ஊக்குவிப்பினை வழங்குதல்.
  12. அங்கவீனமுற்ற நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் ஒருங்கிணைத்தல் மற்றும் அவர்களின் தொழில் சூழலினைப் பாதுகாப்பதற்கு தலையிடுதல்.
  13. பிள்தள்ளப்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமுதாயத்திற்குச் ​சேவைகளினை வழங்கும் தன்னார்வத் தொண்டர்களினை தேசிய மட்டத்தில் ஒருங்கிணைத்தல் மற்றும் அது தொடர்பிலான தரவுத் திட்டத்தினை முன்னெடுத்தல்.
  14. மருத்துவமனையிலுள்ள மற்றும் அங்கிருந்து வெளியேறும் நோயாளர்களின் விசேட நலன்புரித்தேவைகளினைப் பூர்த்தி  செய்வதற்கு இடைத்தரகராகச் செயற்படுதல்.
  15. சேவைகளினை வழங்கும் உத்தியோகத்தர்களின் அறிவு. திறன் மற்றும் உளப்பாங்குகளினை மேம்படுத்துதல்

செயற்பாடுகள்

  1. அங்கவீனமுற்ற இளைஞர், யுவதிகளுக்கு வாழ்க்கைத் தொழிற் பயிற்சியினை வழங்குதல்.
    1. வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனங்களினூடாக 16 – 35 வயதிற்கிடைப்பட்ட இளைஞர், யவுதிகளுக்கு வாழ்க்கைத் தொழிற் பயிற்சியினை வழங்குதல்.
    2. வெற்றிகரமான வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறைவில் சுயதொழிலுக்கான வாழ்க்கைத் தொழில் கருவிகளை வழங்குதல்.
    3. அழகியல் மற்றும் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துதல்.
  2. மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்குப் பாதுகாப்பினை வழங்குதல்.
    1. 02 பாதுகாப்பு நிலையங்களினூடாக முழுநேரமும் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களினை இழந்த மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்குப் பாதுகாப்பினை வழங்குதல்.
    2. அவர்களின் அழகியல், விளையாட்டுக்கள் மற்றும் தொழில் திறன்களினை மேம்படுத்துதல்.
  3. சிறுவர் வழிகாட்டி நிலையங்கள் மற்றும் திறன் விருத்தி நிலையங்களினை அமுலாக்குதல்.
    1. அங்கவீன நிலைமையினைத் தடுத்தல் மற்றும் குறைப்பற்கு தனிநபர் விருத்தி மற்றும் குடும்ப விருத்தி தொடர்பில் செயற்படுதல்.
      1. குழந்தைகளின் வளர்ச்சி நிலைமையினை மதிப்பீடு செய்வதனூடாக எதிர்வரும் மேம்பாட்டுத் திட்டங்களினைத் தயாரித்தல். (தனி நபர்கள் மற்றும் குழுக்களாக)
      2. எதிர்வரும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட புனர்வாழ்வுத் திட்டத்திற்கான  சேவைகளினை விரிவுபடுத்துதல் மற்றும் பின் தொடர்தல்.
      3. பயன்களினைப் பெறும் குடும்பங்களின் உளத்தரத்தினை மேம்படுத்துவதற்கு பல்வேறு செயற்பாடுகளினை முன்னெடுத்தல்.
    2. அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான முன்மாதிரி நிலையமொன்றாகச் செயற்படுதல் மற்றும் சிறுவர் வழிகாட்டல் நிலையங்களுக்கான எண்ணக்கருவினை நாடுபூராவும் செயற்படுத்துதல்.
    3. சிறுவர் வழிகாட்டல் மற்றும் திறன் விருத்தி தொடர்பில் விழிப்புணர்வூட்டுதல். பயிற்சியளித்தல் மற்றும் பல்வேறு வழிகாட்டுதல்கள்.
    4. அவர்களின் பல்வேறு திறன் விருத்தி, முறையான உள்ளடக்கிய கல்விக்கு தயார்படுத்துதல், தலையீடு செய்தல் வாழ்க்கைத் தொழிற் பயிற்சிக்கு தயார்படுத்துதல்.
  4. தேசிய சமுதாய அடிப்படையிலான புனர்வாழ்வு (CBR)
    1. கிராமிய, பிரதேச, மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் அங்கவீனமுற்ற சமுதாயம் மற்றும் அவர்களின் குடும்பத்தின் அங்கத்தவர்களினை ஒருங்கிணைத்தல் மற்றும் ஒழுங்மைத்தல்.
    2. அங்கவீனமுற்ற சமுதாயத்தின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தினை உறுதிப்படுத்துவதற்கு அங்கவீனமுற்ற நபர்கள், அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் உதவிக் குழுக்களினை வலுவூட்டுதல்.
    3. அங்கவீனமுற்ற நபர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்குக் கருத்திட்டங்களினை அமுலாக்குதல் மற்றும் நிதிசார் உதவிகளினை வழங்குதல்.
    4. அங்கவீனமுற்ற சமுதாயம், குடும்பங்கள், உதவிக் குழுக்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சியளித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.
    5. அங்கவீனமுற்ற நபர்கள் தொடர்பிலான தரவுத் திட்டமொன்றினை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் நாளதுவரைப்படுத்துதல்.
    6. அங்கவீனமுற்ற நபர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கு அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களினை ஒருங்கிணைத்தல்.
  5. செவிப்புலனற்ற மற்றும் வாய்பேசாத நபர்களினை வலுவூட்டுதல்.
    1. தேசிய விழாக்கள், தகவல் தொழில்நுட்ப ஊடகம், நீதித்துறை மற்றும் சேவைகள் தேவைப்படும் நிறுவனங்களுக்கு சைகை மொழி மொழிபெயர்ப்புச் சேவைகளை வழங்குதல்.
    2. அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கு சைகை மொழிப் பயிற்சியினை வழங்குதல்.
    3. செவிப்புலனற்ற நபர்களுக்கு அடையாள அட்டைகளினை வழங்குதல்.
  6. போதைக்கு அடிமையானவர்களினை மறுவாழ்வளித்தல்
    1. மறுவாழ்வு நிலையத்தில், நீதிமன்றங்களினூடாகவும் மற்றும் சுய விருப்புடன் அனுப்பப்படும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு விடுதியில் வைத்து புனர்வாழ்வினை வழங்குதல்.
    2. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கும் மற்றும் அவர்களின் குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கும் ஆலோசனையினை வழங்குதல்.
    3. புனர்வாழ்வு பெறுபவர்களுக்கு வாழ்க்கைத் தொழிற் பயிற்சியினை வழங்குதல்.
    4. அவர்களினை சமூகத்துடன் ஒன்றிணைத்தல் மற்றும் பின்தொடர்தல் செயல்முறை.
  7. சமுதாயப் போதைப் தடுப்பு
    1. கிராம மற்றும் பிரதேச மட்டத்தில் சமுதாயத்தினை விழிப்புணர்வூட்டுவதற்கு போதைத் தடுப்புச் செயற்பாடுகளினை ஒருங்கிணைத்தல்.
    2. சமுதாய மட்டத்திலும் மற்றும் பாடசாலை மட்டத்திலும் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களினை செயலாக்குதல்.
    3. தேவையான வேளைகளில் உளவளத்துணைச் சேவைகளினை வழங்குல் மற்றும் போதைத் தடுப்பு மறுவாழ்வுக்கு முன்வைத்தல்.
  8. தற்போதைய சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் தலையிடுதல்.
    1. தற்போதைய சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் ஆய்வுகளினை நடாத்துதல்.
    2. கொள்கைகளினை வடிவமைத்தல்
    3. தேவையான வேளைகளில் வழிக்காட்டுதலினை வழங்குதல்.
  9. தேசிய நிகழ்ச்சித் திட்டங்களினை அமுலாக்குதல்.
    1. சித் றூ கச்சேரியினை நடாத்துதல் (அங்கவீனமுற்ற நபர்களின் கலை மற்றும் கலாசார விழா)
    2. அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய தடகள விளையாட்டு வைபவத்தினை நடாத்துதல்.
    3. வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவனங்களின் அங்கவீனமுற்ற இளைஞர் யுவதிகளுக்கு சிங்கள தமிழ் புதுவருட வைபவத்தினை நடாத்துதல்.
    4. சுவ அபிமானி தேசிய விருது வழங்கும் விழாவினை நடாத்துதல் (அங்கவீனமுற்ற நபர்கள் அவர்களின் குடும்பங்கள், அங்கத்தவர்கள், அமைப்புக்கள், சேவைகளினை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் உத்தியோகத்தர்களினைப் பாராட்டுதல்).
  10. விழிப்புலனற்ற நபர்களினை வலுவூட்டுதல்.
    1. விழிப்புலனற்றவர்களுக்கான புனர்வாழ்வு நம்பிக்கை நிதியத்தினை அமுலாக்குதல்.
    2. விழிப்புலனற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில், புலமைப்பரிசில் உதவிகள் மற்றும் தேவையான உதவிசார் உபகரணங்களினை வழங்குதல்.
    3. சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்புத் தினக் கொண்டாட்டம்.
  11. அங்கவீனமுற்ற நபர்கள் சார்பில் சேவைகளினை வழங்கும் தன்னார்வ அமைப்புக்களினை ஊக்குவித்தல்.
    1. பராமரிப்பு உதவிகளினை வழங்குதல்.
    2. போக்குவரத்துக் கொடுப்பனவுகளினை வழங்குதல்.
    3. முன்பள்ளி ஆசிரியர்களுக்குக் கொடுப்பனவுகளினை வழங்குதல்.
  12. அங்கவீனமுற்ற நபர்களுக்குப் புதிய தொழில் வாய்ப்புக்களினை வழங்குதல்.
    1. தனியார் துறையில் புதிய வேலைவாய்ப்புக்களினைக் கண்டறிந்து ஒருங்கிணைப்பினைச் செய்தல்.
    2. அவ் வேலைச் சூழலினுள் அங்கவீனமுற்ற தொழிலில் ஈடுபட்டுள்ள ஊழியருக்கு மிகவும் உகந்த சுற்றுப்புறச் சூழலினைக் கட்டியெழுப்புதல்.
    3. தொழில் பயிற்சியாளர்களாக (Job Coacher) திணைக்களத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சியளித்தல்.
  13. பின்தள்ளப்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமுதாயத்திற்குச் சேவைகளினை வழங்கும் தன்னார்வத் தொண்டர்களினை தேசிய மட்டத்தில் ஒருங்கிணைத்தல் மற்றும் அது தொடர்பில் தரவுத் திட்டமொன்றினை முன்னெடுத்துச் செல்லுதல்.
    1. தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் நிறுவனங்களினை இணையத் தளத்தினூடாக பதிவு செய்தல்.
    2. தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் சேவைகள் தேவைப்படும் நபர்களுக்கிடையே ஒருங்கிணைப்பினைச் செய்தல்.
    3. தரவுத் திட்டத்தினை முன்னெடுத்தல் மற்றும் நாளதுவரைப்படுத்துதல்.
    4. தன்னார்வச் சேவையினை மதிப்பீட்டிற்கு உட்படுத்தல்.
  14. நோயாளி நலன்புரிச் சேவைகளினை முன்னெடுத்தல்.
    1. உதவி உபகரணங்களினை வழங்குதல்.
    2. தனிப்பட்ட மற்றும் குடும்ப மறுவாழ்வுச் சேவைகளினை வழங்குதல்.
    3. திடீர் மற்றும் விசேட சேவைகளினை வழங்குதல்.
  15. சேவைகளினை வழங்கும் உத்தியோகத்தர்களின் அறிவு, திறன் மற்றும் உளப்பாங்கு விருத்தி.
    1. ஆய்வுகளினை நடாத்துதல்.
    2. விழிப்புணர்வூட்டும் நிகழச்சித் திட்டங்களினை நடாத்துதல்.
    3. உள்ளூர் மற்றும் வெளியூர் பயிற்சிகளினை வழங்குதல்.
    4. வெளிப்புறச் செயற்பாடுகள், வேலைத்திட்டங்களினை நடாத்துதல்.