whitecaneவெள்ளைப் பிரம்பு என்பது கட்புலனற்ற நபர்களின் அசைவையும் திசையையும் பூர்த்திசெய்கின்ற கருவியாகும். இந்த கருவி கட்புலனற்ற நபர்களின் அடையாள குறியீடாகவும் கருதப்படுகிறது. வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துகின்ற கட்புலனற்ற நபரிடமுள்ள தாழ்வு மனப்பான்மை குறைகின்ற அதேவேளையில், அவர்களிடம் பாதுகாப்பு உணர்வையும், சுயாபிமானத்தையும், சுயாதீன தன்மைபற்றிய உணர்வையும் உறுதிப்படுத்துகின்றது.

கட்புலனற்ற நபர்களுக்குரிய இத்தகைய தனித்துவமான கருவியான வெள்ளைப் பிரம்பை அடிப்படையாகக் கொண்டு ஒக்ரோபர் 15ஆம் திகதி சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினமாகப் பிரைகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கண்பார்வையற்ற பிரசைகள் மீது கண்பார்வையுள்ள மக்களின் கண்களைத் திறப்பதன்மூலம் கட்புலனற்ற நபர்கள் முகம்கொடுக்கின்ற சமூக, பொருளாதார, கலாசார, சூழலியல் சிக்கல்களையும் தடைகளையும் அகற்றுவது இந்த தினத்தின் நோக்கமாகும்.

41380323 10216917107909392 8594130895307276288 n

அகில இலங்கையில் 331 பிரதேச செயலகங்களில் சுயசக்தி அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளினதும் அவர்களுடைய குடும்பத்தில் வாழ்கின்றவர்களினதும் வாழ்க்கை நிலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு மாற்றுத்திறனாளினதும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களினதும் தலைமையில் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்து. மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்துவதும் அவர்களின் உரிமைகள் தொடர்பாக அறிவூட்டுவதும் இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்றது.

சுயசக்தி அபிமானி தேசிய விருது வழங்கலிள் நோக்கம்

சமூக சேவைகள் திணைக்களத்தினால் சுயசக்தி அமைப்புகளின் செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கத்தில் அவ்வமைப்பு, அங்கத்தினர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குகின்ற நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகளின் திறன்களை வளர்க்கின்ற திறன்விருத்தி நிலையங்கள் என்பவற்றை பிரதேச, மாவட்ட மற்றும் தேசிய அடிப்படையில் மதிப்பீட்டுக்கு உட்படுத்தும்.

போட்டி பிரிவுகள்

  • சிறந்த சுயசக்தி அமைப்பைத் தெரிவுசெய்தல்
  • சிறந்த சுயசக்தி அங்கத்தவரைத் தெரிவுசெய்தல்
  • சிறந்த சுயசக்தி கருத்திட்டத்தை / நிகழ்ச்சித்திட்டத்தைத் தெரிவுசெய்தல்
  • சுயசக்தி அமைப்பின் வழிகாட்டலில் வீட்டு மட்டத்தில் வெற்றிகரமாக சமூகமயப்படுத்தப்பட்ட அங்கத்தவரைத் தெரிவுசெய்தல்
  • சிறந்த SMART புத்தாக்குநரைத் தெரிவுசெய்தல்
  • வினைத்திறன்மிக்க பிரதேச செயலக பிரிவு அடிப்படையில் சேவை வழங்கிய உத்தியோகத்தர் / மாவட்ட மட்டத்தில் சேவை வழங்கிய உத்தியோகத்தர் / வினைத்திறன்மிக்க வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு சேவை வழங்கிய உத்தியோகத்தர் ஆகியோரைத் தெரிவுசெய்தல்
  • மாற்றுத்திறனாளிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்காக பங்களிப்புச்செய்த சிறந்த தொழில் தருநரை அல்லது நிறுவனத்தை தெரிவுசெய்தல்
  • மாற்றுத்திறனுள்ள பிள்ளைகளுக்கான சிறந்த திறன்விருத்தி நிலையத்தைத் தெரிவுசெய்தல்

மேற்குறிப்பிட்ட மதிப்பீட்டு பிரிவுகளின் கீழ் தேசிய அடிப்படையில் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைத் தெரிவுசெய்து, தேசிய விருது வழங்கும் விழாவை நடத்தி அதில் அந்த வெற்றியாளர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பணப் பரிசு என்பவை வழங்கப்படும்.

sithruசமூக சேவைகள் திணைக்களத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள மாற்றுத் திறனுள்ள நபர்களின் கலை திறன்களை அரங்கேற்றும் நோக்கில் "சித் ரூ" (மனங்கவர் உருவம்) என்ற பெயரில் தேசிய கலாசார கலை விழாவொன்றை வருடாந்தம் நடத்துகின்றது.

2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் இருக்கின்ற வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலுநர்களின் கலாசார திறன்களை அரங்கேற்றுவதற்காக மாத்திரம் நடைபெற்ற இந்த கலை விழாவை 2017ஆம் ஆண்டு முதல் மாற்றுத் திறனுள்ள நபர்களுக்கான தேசிய மட்ட கலாசார கலை விழாவாக்க முடிந்தமை சமூக சேவைகள் திணைக்களம் பெற்ற வெற்றியென குறிப்பிட முடியும்.

இந்த கலை விழா நடைபெற்றபோது மகாண மற்றும் நிறுவன ரீதியில் இரண்டு போட்டிகள் மிகச் சிறந்த நடுவர்களின் கீழ் நடத்தப்படும். இதன்போது அனைத்து மாவட்டங்களிலிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதன்மூலம் முன்வைக்கப்படுகின்ற கலாசார நிகழ்வுகளை அந்தந்த மாவட்டங்களை உரிய மாகாண அடிப்படையில் அவதானித்து அதில் வெற்றி பெறுகின்றவர்களை தேசிய மட்ட போட்டிக்காக கலை விழாவில் முன்னிறுத்தப்படுவார்கள். அத்துடன் நிறுவன அடிப்படையிலான போட்டிக்கு நாடு முழுவதிலும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனங்கள் ஊடாக முன்வைக்கப்படுகின்ற கலை நிகழ்ச்சிகள் நடுவர்களால் பரிசீலிக்கப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

அதன் பிரகாரம் 2017ஆம் ஆண்டில் தேசிய மட்ட போட்டியில் வடமேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய குருணாகல் மாவட்ட குழு, வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய யாழ்ப்பாண மாவட்ட குழு, வடமத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அநுராதபுர மாவட்ட குழு முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை உரித்தாக்கிக்கொண்டன. திணைக்களங்களுக்குள்ள நிறுவன போட்டி பிரிவில் வத்துகாமம் வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனம், அமுணுகும்புர வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனம், கெட்டவல வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனம் என்பவை முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை உரித்தாக்கிக்கொண்டன.

2018ஆம் ஆண்டில் தேசிய மட்ட போட்டியில் முதலாம் இடத்தை மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டமும், இரண்டாம் இடத்தை வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய கிளநொச்சி மாவட்ட குழுவும், மூன்றாம் இடத்தை ஊவா மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பதுளை மாவட்ட குழுவும் வெற்றி கொண்டன. நிறுவன போட்டி பிரிவில் இவ்வாண்டில் முதலாம் இடத்தை வத்துகாமம் வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனம் வெற்றிகொண்டது அத்துடன், இரண்டாம் இடத்தை தெலம்புயாய வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனமும் மூன்றாம் இடத்தை கெட்டவல வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனமும் உரித்தாக்கிக்கொண்டன.