whitecaneவெள்ளைப் பிரம்பு என்பது கட்புலனற்ற நபர்களின் அசைவையும் திசையையும் பூர்த்திசெய்கின்ற கருவியாகும். இந்த கருவி கட்புலனற்ற நபர்களின் அடையாள குறியீடாகவும் கருதப்படுகிறது. வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துகின்ற கட்புலனற்ற நபரிடமுள்ள தாழ்வு மனப்பான்மை குறைகின்ற அதேவேளையில், அவர்களிடம் பாதுகாப்பு உணர்வையும், சுயாபிமானத்தையும், சுயாதீன தன்மைபற்றிய உணர்வையும் உறுதிப்படுத்துகின்றது.

கட்புலனற்ற நபர்களுக்குரிய இத்தகைய தனித்துவமான கருவியான வெள்ளைப் பிரம்பை அடிப்படையாகக் கொண்டு ஒக்ரோபர் 15ஆம் திகதி சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினமாகப் பிரைகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கண்பார்வையற்ற பிரசைகள் மீது கண்பார்வையுள்ள மக்களின் கண்களைத் திறப்பதன்மூலம் கட்புலனற்ற நபர்கள் முகம்கொடுக்கின்ற சமூக, பொருளாதார, கலாசார, சூழலியல் சிக்கல்களையும் தடைகளையும் அகற்றுவது இந்த தினத்தின் நோக்கமாகும்.