sithruசமூக சேவைகள் திணைக்களத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள மாற்றுத் திறனுள்ள நபர்களின் கலை திறன்களை அரங்கேற்றும் நோக்கில் "சித் ரூ" (மனங்கவர் உருவம்) என்ற பெயரில் தேசிய கலாசார கலை விழாவொன்றை வருடாந்தம் நடத்துகின்றது.

2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் இருக்கின்ற வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலுநர்களின் கலாசார திறன்களை அரங்கேற்றுவதற்காக மாத்திரம் நடைபெற்ற இந்த கலை விழாவை 2017ஆம் ஆண்டு முதல் மாற்றுத் திறனுள்ள நபர்களுக்கான தேசிய மட்ட கலாசார கலை விழாவாக்க முடிந்தமை சமூக சேவைகள் திணைக்களம் பெற்ற வெற்றியென குறிப்பிட முடியும்.

இந்த கலை விழா நடைபெற்றபோது மகாண மற்றும் நிறுவன ரீதியில் இரண்டு போட்டிகள் மிகச் சிறந்த நடுவர்களின் கீழ் நடத்தப்படும். இதன்போது அனைத்து மாவட்டங்களிலிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதன்மூலம் முன்வைக்கப்படுகின்ற கலாசார நிகழ்வுகளை அந்தந்த மாவட்டங்களை உரிய மாகாண அடிப்படையில் அவதானித்து அதில் வெற்றி பெறுகின்றவர்களை தேசிய மட்ட போட்டிக்காக கலை விழாவில் முன்னிறுத்தப்படுவார்கள். அத்துடன் நிறுவன அடிப்படையிலான போட்டிக்கு நாடு முழுவதிலும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனங்கள் ஊடாக முன்வைக்கப்படுகின்ற கலை நிகழ்ச்சிகள் நடுவர்களால் பரிசீலிக்கப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

அதன் பிரகாரம் 2017ஆம் ஆண்டில் தேசிய மட்ட போட்டியில் வடமேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய குருணாகல் மாவட்ட குழு, வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய யாழ்ப்பாண மாவட்ட குழு, வடமத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அநுராதபுர மாவட்ட குழு முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை உரித்தாக்கிக்கொண்டன. திணைக்களங்களுக்குள்ள நிறுவன போட்டி பிரிவில் வத்துகாமம் வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனம், அமுணுகும்புர வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனம், கெட்டவல வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனம் என்பவை முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை உரித்தாக்கிக்கொண்டன.

2018ஆம் ஆண்டில் தேசிய மட்ட போட்டியில் முதலாம் இடத்தை மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டமும், இரண்டாம் இடத்தை வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய கிளநொச்சி மாவட்ட குழுவும், மூன்றாம் இடத்தை ஊவா மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பதுளை மாவட்ட குழுவும் வெற்றி கொண்டன. நிறுவன போட்டி பிரிவில் இவ்வாண்டில் முதலாம் இடத்தை வத்துகாமம் வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனம் வெற்றிகொண்டது அத்துடன், இரண்டாம் இடத்தை தெலம்புயாய வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனமும் மூன்றாம் இடத்தை கெட்டவல வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனமும் உரித்தாக்கிக்கொண்டன.